அஞ்சல் சேவையில் முறையான ஆட்சேர்ப்பு கொள்கை அவசியம் - Trincoinfo

புதிய தகவல்கள்

Post Top Ad

Post Top Ad

Thursday, January 4, 2018

அஞ்சல் சேவையில் முறையான ஆட்சேர்ப்பு கொள்கை அவசியம்

அஞ்சல் சேவையில் முறையான ஆட்சேர்ப்பு கொள்கையொன்றை தயாரிக்க வேண்டும் என ஒன்றிணைந்த அஞ்சல் தொழிற்சங்க முன்னணி, அஞ்சல் திணைக்களத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.

இதற்காக எதிர்வரும் 10 ஆம் திகதிவரை அரசாங்கத்துக்கு கால அவகாசம் வழங்குவதாக அதன் ஒருங்கிணைப்பாளர் சிந்தக பண்டார தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் 10 ஆம் திகதிக்கு முன்னர் முறையான ஆட்சேர்ப்பு கொள்கையை தயாரிக்காவிட்டால் அன்று நள்ளிரவு 12 மணி முதல் தொடர் பணிப்புறக்கணிப்பை முன்னெடுக்க தீர்மானித்துள்ளதாக அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தமது முன்னணியில் உள்ள ஏனைய தொழிற்சங்களுடன் இணைந்து நேற்று நடத்திய கலந்துரையாடலில் இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக அவர் கூறியுள்ளார்.

இதற்கமைய, அஞ்சல் திணைக்களத்தின் 21 ஆயிரத்துக்கும் அதிகமான பணியாளர்கள் இந்த பணிப்புறக்கணிப்பில் ஈடுபட உள்ளதாக சிந்தக பண்டார தெரிவித்துள்ளார்.

எனவே, குறித்த பிரச்சினைக்கு தீர்வுகாண அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages