'விஜய் 62' போட்டோஷூட் படங்கள் லீக்... படக்குழுவினர் அதிர்ச்சி - Trincoinfo

புதிய தகவல்கள்

Post Top Ad

Post Top Ad

Wednesday, January 3, 2018

'விஜய் 62' போட்டோஷூட் படங்கள் லீக்... படக்குழுவினர் அதிர்ச்சி
விஜய் நடிக்கும் 62-வது படத்தை இயக்குநர் முருகதாஸ் இயக்குகிறார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் இப்படத்தைத் தயாரிக்கிறது. இவர்கள் சேர்ந்து எடுத்த 'துப்பாக்கி', 'கத்தி' ஆகிய படங்களைத் தொடர்ந்து மூன்றாவது முறையாக விஜய்யின் 62-வது படம் மூலம் இணைகிறார்கள். 'விஜய் 62' படத்தின் படப்பிடிப்பு இந்த மாத இறுதியில் அல்லது பிப்ரவரி முதல் வாரத்தில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்தின் போட்டோஷூட் புகைப்படங்கள் லீக்காகி இருக்கின்றன.
இந்தப் படத்தில் விஜய்க்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கவிருப்பதை படத்தயாரிப்பு நிறுவனமான சன் பிக்‌சர்ஸ் உறுதி செய்துள்ளது. 'பைரவா' படத்தை அடுத்து மீண்டும் கீர்த்தி சுரேஷ் விஜய்யுடன் ஜோடி சேர்கிறார்.

'விஜய் 62' படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க இருப்பதாக படக்குழுவினர் சார்பில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 'சோலோ' புகழ் கிரிஷ் கங்காதரன் ஒளிப்பதிவு செய்யவுள்ள இந்தப் படத்திற்கு ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பாளராகவும் பணியாற்றவுள்ளனர்.

விஜய் 62 படத்தின் போட்டோஷூட் தற்போது நடைபெற்று வருகிறது. சென்னை ஏ.வி.எம் ஸ்டூடியோவில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சில நிமிடங்களிலேயே சமூக வலைதளங்களில் லீக்கானது.

உடனடியாக லீக் ஆன புகைப்படங்கள் மற்றும் வீடியோவால் படக்குழு அதிர்ச்சியடைந்தனர். அவற்றை உடனே நீக்க வேண்டும்; வெளியிட்டவர்கள் மீது நாங்கள் நடவடிக்கை எடுக்கப்போகிறோம் படக்குழு தரப்பு என கூறியுள்ளது.

இந்தப் புகைப்படங்கள் ஸ்டூடியோவுக்குள் நின்றிருக்கும் நபர்களால் எடுக்கப்பட்டிருப்பது தெளிவாகத் தெரிகிறது. சமூக வலைதளங்களில் வெளியான சில நிமிடங்களிலேயே செம வைரலாகப் பரவி ட்ரெண்டாகிவிட்டது விஜய்யின் லுக்.
No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages