முகாமைத்துவ உதவியாளர் சேவைக்கு விரைவில் 6138 பேர் இணைப்பு... - Trincoinfo

புதிய தகவல்கள்

Post Top Ad

Post Top Ad

1/02/2018

முகாமைத்துவ உதவியாளர் சேவைக்கு விரைவில் 6138 பேர் இணைப்பு...

 முகாமைத்துவ உதவியாளர் சேவைக்கு விரைவில் 6138 பேர் இணைப்பு...
அரச முகாமைத்துவ உதவியாளர் சேவைக்கு 6138 பேர் இணைத்துக்கொள்ளப்படவுள்ளனர்.

குறித்த சேவையில் இணைத்துக்கொள்வதற்காக கடந்த வருடம் நடத்தப்பட்ட மட்டுப்படுத்தப்பட்ட போட்டிப்பரீட்சையின் 30 வீதமானவர்களை இனைத்துக்கொள்வதற்கான பெறுபேறுகள் கடந்த டிசம்பர் மாதம் 27ம் திகதி வௌியாகியுள்ளது.

அதற்கமைய, மாவட்ட வெற்றிடங்களைக் கருத்திற்கொண்டு வெட்டுப்புள்ளிகள் தீர்மானிக்கப்படும் என்றும் அதன்பிறகு இலங்கை தேர்தல் ஆணைக்குழுவின் விசேட அனுமதியின் பின்னர் தகுதியுடையவர்கள் சேவையில் இணைத்துக்கொள்ளவதற்கான நேர்முகத் தேர்வு இன்னும் சில தினங்களில் நடாத்தப்படும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

திறந்த போட்டிப்பரீட்சைக்கான பெறுபேறுகள் விரைவில் வௌியாகும் என்றும் அதனூடாக 70 வீதமானவர்கள் சேவையில் இணைத்துக்கொள்ளப்புவார்கள் என்றும் தெரிவிக்கப்படுகிறது.
http://www.pubad.gov.lk

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages