'இந்தியன் 2' படத்தின் கான்செப்ட் ஓவியராக விஸ்வநாத் சுந்தரம் ஒப்பந்தம் - Trincoinfo

புதிய தகவல்கள்

Post Top Ad

Post Top Ad

1/11/2018

'இந்தியன் 2' படத்தின் கான்செப்ட் ஓவியராக விஸ்வநாத் சுந்தரம் ஒப்பந்தம்

ஷங்கர் இயக்கத்தில் கமல் நடிப்பில் உருவாக உள்ள 'இந்தியன் 2' படத்தின் கான்செப்ட் ஓவியராக விஸ்வநாத் சுந்தரம் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இதை அவர் தன் முகநூல் பக்கத்தில் உறுதி செய்துள்ளார்.
2.0' படத்தைத் தொடர்ந்து ஷங்கர் இயக்கத்தில் உருவாக உள்ள 'இந்தியன் 2' படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கவுள்ளது. தற்போது '2.0' இறுதிக்கட்டப் பணிகளில் தீவிரம் காட்டும் ஷங்கர், அதனைத் தொடர்ந்து 'இந்தியன் 2' படத்தின் முதற்கட்டப் பணிகளில் கவனம் செலுத்த உள்ளார்.
'இந்தியன் 2' படத்தின் இசையமைப்பாளராக அனிருத் ஏற்கெனவே ஒப்பந்தம் செய்யப்பட்டார். தற்போது கான்செப்ட் ஓவியராக விஸ்வநாத் சுந்தரம் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
படத்தின் காட்சி உருவாக்கத்தில் ஓவியத்துக்கும் முக்கியப் பங்கு உண்டு என்பதை சமீபத்திய திரைப்படங்கள் மூலம் நிரூபித்தவர் விஸ்வநாத் சுந்தரம். இவர் வரைந்து கொடுத்த ஓவியங்களை அடிப்படையாகக் கொண்டு 'பாகுபலி', 'பாகுபலி 2' ஆகிய இரு படங்களிலும் ராஜமௌலி பல காட்சிகளைக் காட்சிப்படுத்தியுள்ளார்.
'2.0' படத்தில் விஸ்வநாத் சுந்தரம் மிகச் சிறந்த முறையில் பணியாற்றியதால், இந்தியன் 2 படத்திற்கும் பணியாற்றும் வாய்ப்பு கிடைத்துள்ளதாக சினிமா வட்டாரத்தில் பேசப்படுகிறது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages