தீவிர அரசியலில் ஜனவரி 26 முதல் குதிப்பு- தமிழகம் முழுவதும் சுற்றுப் பயணம்: கமல்ஹாசன் அறிவிப்பு - Trincoinfo

புதிய தகவல்கள்

Post Top Ad

Post Top Ad

1/13/2018

தீவிர அரசியலில் ஜனவரி 26 முதல் குதிப்பு- தமிழகம் முழுவதும் சுற்றுப் பயணம்: கமல்ஹாசன் அறிவிப்பு


தீவிர அரசியலில் வரும் ஜனவரி 26-ந் தேதி முதல் குதிக்க இருப்பதாக நடிகர் கமல்ஹாசன் அறிவித்துள்ளார். அரசியலுக்கு வரப் போவதாக நடிகர் ரஜினிகாந்த் அறிவித்தார். தாம் தீவிர அரசியலில் இருப்பதாக நடிகர் கமல்ஹாசன் கூறிவந்தார்.

ரஜினிகாந்த் தனிக்கட்சியைத் தொடங்க உள்ளார். இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது. இந்நிலையில் நடிகர் கமல்ஹாசன் தாம் வரும் 26-ந் தேதி முதல் தீவிர அரசியலில் குதிப்பேன் என அறிவித்துள்ளார். அத்துடன் தமிழகம் முழுவதும் சுற்றுப் பயணம் மேற்கொள்ள உள்ளதாகவும் இதற்கான முறையான அறிவிப்பு வரும் 18-ந் தேதி வெளியிடப்படும் என்றும் கமல்ஹாசன் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages