அரச ஊழியர்களின் அடிப்படை சம்பளம் 2,500 ரூபாசினால் அதிகரிப்பு - Trincoinfo

புதிய தகவல்கள்

Post Top Ad

Post Top Ad

1/03/2018

அரச ஊழியர்களின் அடிப்படை சம்பளம் 2,500 ரூபாசினால் அதிகரிப்பு

அரசாங்க ஊழியர்களின் அடிப்படை சம்பளம் 2500 ரூபாவினால் அதிகரிக்கப்படுவதாக திறைசேரி அறிவித்துள்ளது.

2016ஆம் ஆண்டில் இருந்து 2020 ஆம் ஆண்டு வரை வருடாந்தம் 2500 ரூபாய் என்ற கணக்கில் 4 கட்டங்களில் அரசாங்க ஊழியர்களின் அடிப்படை சம்பளத்தை 10000 ரூபாயில் அதிகரிக்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

அதற்கமைய மூன்றாம் கட்ட சம்பளம் அதிகரிப்பு நேற்று (01) முதல் ஆரம்பிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

2015ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 8ஆம் திகதி அதிகாரத்திற்கு வந்த அரசினால் 14 இலட்ச அரசாங்க ஊழியர்களின் சம்பளத்தை 10000 ரூபாயில் அதிகரிப்பதற்கு நடவடிக்கை மேற்கொண்டது.

முதலில் 2500 ரூபாய் அரச ஊழியர்களின் சம்பளத்துடன் இணைக்கப்பட்டது. 2016ஆம் ஆண்டு முதல் இந்த 2500 ரூபாய் பணத்தை அடிப்படை சம்பளத்துடன் இணைப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

அதற்கமைய இந்த வருடத்தின் ஆரம்ப நாளான நேற்று முதல் அரசாங்க ஊழியர்களின் அடிப்படை சம்பளத்துடன் மூன்றாம் கட்டமாக 2500 ரூபாய் சேர்க்கப்படவுள்ளது.

இவ்வாறான முறையில் அரசாங்க ஊழியர்களின் அடிப்படை சம்பளத்துடன் இந்த கொடுப்பனவு இணைக்கப்படுவதனால், ஓய்வு பெறும் அரசாங்க ஊழியர்களுக்கும் பல்வேறு சலுகைகள் வழங்கப்படவுள்ளதாக திரைச்சேரி அறிவித்துள்ளது.

அடிப்படை சம்பளம் அதிகரிக்கப்படுகின்றமையினால் அரசாங்க ஊழியர்களின் மேலதிக கொடுப்பனவுகள் அதிகரிக்கப்படவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages