2017 / 2018 பல்கலைக்கழக அனுமதிக்கான விண்ணப்ப கையேடு வெளியீடு - Trincoinfo

புதிய தகவல்கள்

Post Top Ad

Post Top Ad

1/05/2018

2017 / 2018 பல்கலைக்கழக அனுமதிக்கான விண்ணப்ப கையேடு வெளியீடு

2017 / 2018 ஆம் ஆண்டுக்கான பல்கலைக்கழக அனுமதிக்கான விண்ணப்ப கையேடு வெளியிடப்பட்டுள்ளது.

கடந்த வருடத்தில் கல்வி பொதுத்தராதர உயர்தர பரீட்சையின் பெறுபேறுகளின் அடிப்படையில் பல்கலைக்கழகங்களுக்கு மாணவர்களை இணைத்துக்கொள்வதற்கான விண்ணப்பப்படிவங்கள் இதில் உள்ளடங்கியுள்ளன.

இன்று முதல் எதிர்வரும் 26 ஆம் திகதிவரையில் பல்கலைக்கழகங்களுக்கு இணையத்தளத்தினூடாக மாத்திரமே விண்ணப்பங்களை சமர்ப்பிக்கவேண்டும்.

இதில் உள்ளடக்கப்பட்டுள்ள கையேட்டில் வழங்கப்பட்டுள்ள ஆலோசனைகளுக்கு அமைவாக இணையத்தளத்தினூடாக விண்ணப்பங்களை சமர்ப்பிக்குமாறு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு மாணவர்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது.

இம்முறை பல்கலைக்கழகங்களுக்கு 30ஆயிரத்து 500 மாணவர்கள் சேர்த்துக்கொள்ளப்படவுள்ளனர்.

2017ஆம் ஆண்டு கல்வி பொதுத்தராதர உயர்தரப்பரீட்சையில் 1 இலட்சத்து 63ஆயிரத்து 104 பேர் பல்கலைக்கழக அனுமதிக்கான தகுதியை பெற்றுக்கொண்டமை குறிப்பிட்டத்தக்கது.

--------------------------------------------------------------------------------------------------------------- 
#இம்முறை_கா.பொ.த உ/தர #பரீட்சை_எழுதிய_அனைத்துதமிழ்_மாணவர்களின்_கவனத்திற்கும்!

இம்முறை வெளியாகிய A/L பரீட்சை பெறுபேற்றின் அடிப்படையில் பல்கலைக்கழகத்திற்கு விண்ணப்பிப்பதற்கான பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் மிக விரைவில் விண்ணப்பப்படிவம் கோரப்படவுள்ளது.

இதன் போது வழமையாக தான் பல்கலைக்கழகம் தெரிவு செய்யப்பட்டுள்ளோம் என உறுதியான மாணவர்கள் விண்ணப்பிப்பதும் ஏனையவர்கள் விண்ணப்பிக்காமல் விடுவதும் வழமை ஆனால் இது பெரும் தவறாகும். *3s* எடுத்திருந்தால் கூட அனைவரும் கட்டாயம் விண்ணப்பிக்க வேண்டும்.* ஏனெனில் கலைத்துறையில் சில பாடங்களுக்கு *special intake under the special subject* என்ற அடிப்படையில் குறைவான Z புள்ளியை *பெற்ற மாணவர்களும் பல்கலைக்கழகம் நுழைய முடியும். ஆனால் இவைகள் தெரியாததால் அதிகமான மாணவர்கள் பல்கலைக்கழகத்துக்கு விண்ணப்பிக்காமல் பல்கலைக்கழக நுழைவை இழந்துள்ளார்கள். 

இது தவிர விண்ணப்பப்படிவம் நிரப்பும் போது பொருத்தமான கற்கைகளை தெரிவு செய்யாததனாலும் பல்கலைக்கழக நுழைவை இழந்துள்ளார்கள்.

சென்ற முறை special intake under the special subject அடிப்படையில் 800 க்கு மேல் மாவட்ட நிலையை பெற்றவர்களும் பல்கலைக்கழகம் தெரிவாகியுள்ளனர்.

*ஆகவே பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் கைநூல் வெளியானதும் தயவு செய்து ஏதாவது பாடநெறிக்கு விண்ணப்பியுங்கள்.

*உங்கள் எதிர்காலம் சிறப்பாய் அமையும். 

By - Retnathurai Haran

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages