வடகீழ் பருவப் பெயர்ச்சி காலநிலை; வட, கிழக்கில் மழை - Trincoinfo

புதிய தகவல்கள்

Post Top Ad

Post Top Ad

12/19/2017

வடகீழ் பருவப் பெயர்ச்சி காலநிலை; வட, கிழக்கில் மழை

 
நாட்டின் பல பகுதிகளில் இன்று (19) பிற்பகலில் பலத்த மழை பெய்வதற்கான வாய்ப்புகள் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
நாட்டை சூழவுள்ள பகுதிகளில் வடகீழ் பருவப் பெயர்ச்சி நிலை காணப்படுவதால், நாட்டின் வடக்கு, வட மத்திய, கிழக்கு, ஊவா மாகாணங்கள் மற்றும் மாத்தளை, அம்பாந்தோட்டை மாவட்டங்களில் பாரிய மழை பெய்யலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
ஏனைய பிரதேசங்களில், பிற்பகல் 2.00 மணியின் பின்னர், மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்வதற்கான சாத்தியங்கள் காணப்படுவதாக திணைக்களம் அறிவித்துள்ளது.
குறிப்பாக கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்கள், பொலன்னறுவை, மாத்தளை மாவட்டங்களில் 75 மி.மீ. இலும் அதிக மழை பெய்வதற்கான வாய்ப்பு காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த நேரத்தில், வடக்கு, மத்திய மாகாணங்கள் மற்றும் அம்பாந்தோட்டை, மொணராகலை மாவட்டங்களில், மணிக்கு 50 கிலோ மீற்றர் வேகத்தில் பாரிய காற்று வீசக்கூடும் எனவும், காற்றின் வேகம் தற்காலிகமாக அதிகரிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages