சீரியல் சீக்ரெட்ஸ்: ராதிகா, செம்பா, சத்யா, வள்ளி ஒரு எபிசோடுக்கு வாங்கும் சம்பளம் தெரியுமா? - Trincoinfo

புதிய தகவல்கள்

Post Top Ad

Post Top Ad

12/12/2017

சீரியல் சீக்ரெட்ஸ்: ராதிகா, செம்பா, சத்யா, வள்ளி ஒரு எபிசோடுக்கு வாங்கும் சம்பளம் தெரியுமா?தொலைக்காட்சி தொடர்களில் நடிக்கும் நடிகைகளின் ஒரு எபிசோடுக்கான சம்பளம் எவ்வளவு என்று ஒரு தகவல் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. இல்லத்தரசிகளையும் தொலைக்காட்சி தொடர்களையும் பிரிக்க முடியாத அளவுக்கு உள்ளார்கள். வீட்டில் சும்மா இருக்கும்போது நேரம் போக சீரியல் தான் உதவுகிறது என்கிறார்கள். இந்நிலையில் சீரியல் நடிகைகள் ஒரு எபிசோடுக்கு வாங்கும் சம்பளம் என்று கூறி ஒரு தகவல் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகியுள்ளது.

வாணி ராணி சீரியலில் ஒரு எபிசோடில் நடிக்க ராதிகா ரூ. 1 லட்சம் வாங்குகிறாராம். வம்சம் சீரியலில் நடிக்கும் ரம்யா கிருஷ்ணன் எபிசோடுக்கு ரூ. 50 ஆயிரம் பெறுகிறாராம்.

சரவணன் மீனாட்சி சீரியலில் நடிக்கும் ரச்சிதா எபிசோடு ஒன்றுக்கு ரூ. 25 ஆயிரம் சம்பளம் வாங்குகிறாராம். தெய்வமகள் சீரியலில் சத்யாவாக நடிக்கும் வாணி போஜன் எபிசோடுக்கு ரூ. 10 ஆயிரம் வாங்குகிறாராம்.

ராஜா ராணி சீரியலில் செம்பாவாக வரும் ஆலியா மானசா எபிசோடுக்கு ரூ. 15 ஆயிரமும், குல தெய்வம் தொடரில் நடிக்கும் ஸ்ருத்திகா ரூ. 15 ஆயிரமும் வாங்குகிறார்களாம்.

ப்ரியமானவள் தொடரில் நடிக்கும் ப்ரவீனா எபிசோடு ஒன்றுக்கு ரூ. 10 ஆயிரமும், வள்ளி தொடர் புகழ் வித்யா ரூ. 10 ஆயிரமும் சம்பளம் வாங்குகிறார்களாம்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages