வாவ்... செம ஸ்டைலாக தல... வைரலாகும் லேட்டஸ்ட் புகைப்படம்! - Trincoinfo

புதிய தகவல்கள்

Post Top Ad

Post Top Ad

12/11/2017

வாவ்... செம ஸ்டைலாக தல... வைரலாகும் லேட்டஸ்ட் புகைப்படம்!


அஜித்தின் 58-வது படமான 'விசுவாசம்' படத்தையும் சிறுத்தை சிவாவே இயக்க, விவேகம் படத்தைத் தயாரித்த சத்யஜோதி பிலிம்ஸே இப்படத்தைத் தயாரிக்கிறது. இந்தப் படத்தின் மூலம் நான்காவது முறையாக அஜித்தும் சிவாவும் இணைகிறார்கள். இந்த படத்தின் பூஜை கடந்த வியாழக்கிழமை சத்தமில்லாமல் நடைபெற்று முடிந்தது. அஜித்தை தவிர்த்து, படத்தில் பணியாற்றும் டெக்னீசியன்கள் மட்டுமே இந்த பூஜையில் கலந்து கொண்டனர். இந்தப் படத்தின் ஷூட்டிங் ஜனவரி மாதத்தில் தொடங்க இருக்கிறது.

'விசுவாசம்' படத்தின் ஹீரோயின் யார் என்கிற விவரம் இன்னும் வெளியிடப்படாத நிலையில், அப்படத்தில் ஒப்பந்தமாகியுள்ள சில டெக்னீசியன்கள் பற்றிய தகவல்கள் வெளியாகியிருக்கிறது. 'விசுவாசம்' படத்திற்கு இசை - யுவன் ஷங்கர் ராஜா, ஒளிப்பதிவு - வெற்றி, எடிட்டர் ரூபன் என்பதை உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். 'விசுவாசம்' படத்தில் அஜித் இளமையான தோற்றத்தில் கருப்பு முடியோடு நடிக்கிறர் எனும் தகவல் வெளியானது. அதை உறுதிப் படுத்தும் வகையில் அஜித் கடந்த வாரம் சாய்பாபா கோவிலுக்குச் சென்றபோது, அங்கு ரசிகர்கள் எடுத்த வீடியோ சோஷியல் மீடியாவில் காட்டுத்தீயாகப் பரவியது. இந்நிலையில், அஜித்தின் இன்னொரு லேட்டஸ்ட் புகைப்படம் வைரலாகப் பரவி வருகிறது. இந்தப் புகைப்படத்தில் அஜித் செம ஸ்டைலிஷாக கருப்பு முடி மற்றும் லேசான தாடியுடன் இளமையாகத் தோற்றமளிக்கிறார். இந்தப் படத்தை அஜித் ரசிகர்கள் அதிகமாக ஷேர் செய்து வருகிறார்கள்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages