திடீர் அனர்த்தம் : அறிவிப்பதற்கான தொலைபேசி இலக்கங்கள்...... - Trincoinfo

புதிய தகவல்கள்

Post Top Ad

Post Top Ad

12/01/2017

திடீர் அனர்த்தம் : அறிவிப்பதற்கான தொலைபேசி இலக்கங்கள்......

 
இயற்கை அனர்த்தங்கள் தொடர்பான தகவல்களை வழங்க உள்நாட்டு அலுவல்கள் அமைச்சு   1902 என்ற  அவசர தொலைபேசி இலக்கத்தை அறிமுகம் செய்துள்ளது. 
இந்த தொலைபேசி  இலக்கத்தின் மூலம் அமைச்சின் செயலாளரை தொடர்பு கொண்டு தகவல்களை பெற முடியும். 
 
அமைச்சர் வஜிர அபேவர்த்தனவின் பணிப்புரைக்கு அமைய நிவாரணங்களை வழங்கும் நடவடிக்கைகள் மாவட்ட பிரதேச செயலாளர்களின் ஊடாக முன்னெடுக்கப்பட இருக்கின்றன. 
 
தொடர்ந்து மழை பெய்வதால் வெள்ளம் ஏற்படுவதற்கான அபாயமும் காணப்படுகிறது.  இவ்வாறான விடயங்கள் பற்றி எச்சரிக்கையுடன் இருக்குமாறு அமைச்சர் அவர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார். 
 
வீடுகளுக்கோ சேதம் ஏற்பட்டிருப்பின் கிராம உத்தியோகத்தர்களின் ஊடாக அது பற்றி அறிவிக்குமாறு அமைச்சர் மக்களை கேட்டுள்ளார். 
 
மின்சார துண்டிப்பு தொடர்பாக தகவல்களை வழங்குவதற்கான தொலைபேசி இலக்கங்களும் வழங்கப்பட்டுள்ளன. 1987 என்ற தொலைபேசி இலக்கத்தின் ஊடாக மின்சார சபையை தொடர்பு கொள்ள முடியும். 
 
இலங்கை தனியார் மின்சார நிறுவனத்தின் தொலைபேசி இலக்கம் 1910 ஆகும். 1901 என்ற தொலைபேசி இலக்கத்தின் மூலம் வலுசக்தி அமைச்சுக்கு தகவல்களை வழங்கலாம். 
 
களுத்துறைஇ இரத்மலானை பிரதேச மக்கள் 011- 44 18 418 என்ற தொலைபேசி இலக்கத்தின் ஊடாகவும்இ தென்மாகாண மக்கள் 071- 423 86 23என்ற தொலைபேசி ஊடாக தொடர்பு கொள்ளலாம். 
குடிநீர் தொடர்பான பிரச்சினைகள் இருக்குமாயின் பௌசர்கள் மூலம் நீரை விநியோகிக்க நீர் வழங்கல் அமைச்சு திட்டமிட்டுள்ளது. குடிநீர் தொடர்பான தேவைகளை 012 - 177 240 அல்லது 011- 2177 241 என்ற தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொள்ள முடியும்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages