அரை நிர்வாண கோலத்தில் பிணமாகக் கிடந்த பிரபல நிகழ்ச்சி தொகுப்பாளினி - Trincoinfo

புதிய தகவல்கள்

Post Top Ad

Post Top Ad

12/12/2017

அரை நிர்வாண கோலத்தில் பிணமாகக் கிடந்த பிரபல நிகழ்ச்சி தொகுப்பாளினி


மும்பையில் 24 வயது நிகழ்ச்சி தொகுப்பாளினி அடுக்குமாடி குடியிருப்பின் 2வது மாடியில் இருக்கும் குழாயில் பிணமாக தொங்கியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மும்பையை சேர்ந்தவர் அர்பிதா திவாரி(24). நிகழ்ச்சி தொகுப்பாளினியான அவர் அண்மையில் தனது காதலர் பங்கஜ் ஜாதவுடன் சேர்ந்து விளம்பர நிறுவனம் ஒன்றை துவங்கியுள்ளார். இருவருக்கும் விரைவில் திருமணம் நடக்க இருந்தது. அர்பிதா தனது காதலருடன் சேர்ந்து மானவ்ஸ்தல் ஹைட்ஸ் என்ற 19 அடுக்குமாடி குடியிருப்புக்கு சென்றுள்ளார்.

அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் நண்பரை சந்திக்க அதிகாலை 3 மணிக்கு அர்பிதாவும், ஜாதவும் சென்றுள்ளார். அவர்களின் நண்பர் 15வது மாடியில் வசித்து வருகிறார்.

4 மணிக்கு அனைவரும் தூங்கியுள்ளனர். காலை 7 மணிக்கு எழுந்த ஜாதவ் பாத்ரூமுக்கு சென்றபோது அது உள்புறமாக பூட்டியிருந்ததால் அவர் மீண்டும் வந்து படுத்து தூங்கிவிட்டார்.

மீண்டும் எழுந்து வந்தபோதும் பாத்ரூம் பூட்டியிருந்ததால் சாவி போட்டு திறந்து பார்த்தனர். பாத்ரூம் ஜன்னலின் கண்ணாடியை எடுத்து தரையில் வைத்திருந்ததை பார்த்தனர். அர்பிதாவை வீட்டில் காணாமல் இருவரும் தேடினர்.

தேடிப் பார்த்தபோது அர்பிதா 2வது மாடியின் குழாயில் பிணமாகத் தொங்கியது தெரிய வந்தது. அவர் உள்ளாடையில் அரை நிர்வாணமாக கிடந்தார். அவர் தங்கியிருந்த வீட்டில் இருந்து மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அவர் தானாக குதித்தாரா, தவறி விழுந்தாரா என்று தெரியவில்லை. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages