இளைஞர் யுவதிகளுக்கு யப்பானில் மேலும் தொழில்வாய்ப்பு - Trincoinfo

புதிய தகவல்கள்

Post Top Ad

Post Top Ad

12/14/2017

இளைஞர் யுவதிகளுக்கு யப்பானில் மேலும் தொழில்வாய்ப்புஇலங்கை இளைஞர் யுவதிகளுக்கு தொழில்வாய்ப்பு வழங்குவது தொடர்பில் யப்பான் கவனம் செலுத்தியுள்ளது.
தற்பொழுது யப்பானுக்கான விஜயத்தில் ஈடுபட்டுள்ள தொழிற்பயிற்சி மற்றும் திறனாற்றல் அமைச்சர் சந்திம வீரக்கொடி யப்பானின் கனஷவா மாநில ஆளுநர் யுஜி குரோஜ்வாவை சந்தித்துள்ளார். இந்த சந்திப்பின்போது இடம்பெற்ற பேச்சுவார்த்தையில் இரு நாடுகளுக்கிடையிலான நல்லுறவு தொடர்பிலான பல விடயங்கள் கலந்துரையாடப்பட்டன.

திறனாற்றல் அபிவிருத்தி மற்றும் தொழிற்பயிற்சி அமைச்சின் ஊடாக நாட்டின் இளைஞர் யுவதிகளுக்கு தொழில்வாய்ப்பு வழங்கமுடியும் என்று கனஷவா ஆளுநர் தெரிவித்துள்ளார். இதற்கு நன்றி தெரிவிப்பதாக அமைச்சர் சந்திம வீரக்கொடி குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages