ரஜினியின் 'காலா' படத்தை வாங்கிய லைகா... அதிகாரப்பூர்வ வெளியீடு! - Trincoinfo

புதிய தகவல்கள்

Post Top Ad

Post Top Ad

Tuesday, December 12, 2017

ரஜினியின் 'காலா' படத்தை வாங்கிய லைகா... அதிகாரப்பூர்வ வெளியீடு!


ரஜினிகாந்தின் 68-வது பிறந்த நாளை ஒட்டி, நள்ளிரவு 12 மணிக்கு 'காலா' படத்தின் செகண்ட் லுக் போஸ்டரை தனுஷ் வெளியிட்டார்.
ரஜினிகாந்த் 'கபாலி' படத்தில் நடித்து முடித்ததற்குப் பிறகு மீண்டும் ஷங்கர் இயக்கத்தில் '2.O' படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆனார்.
அந்தப் படத்தின் படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கும் சமயத்திலேயே ரஜினிகாந்தின் மருமகனும், நடிகரும், தயாரிப்பாளருமான தனுஷ், 'கபாலி' படத்திற்குப் பிறகு ரஜினிகாந்த், மீண்டும் பா.ரஞ்சித் இயக்கத்தில் நடிக்க உள்ளார் என்ற அறிவிப்பை வெளியிட்டார்.
அதன் பின் பா.ரஞ்சித் இயக்கும் இந்தப் படத்திற்கு 'காலா' என்று பெயர் வைத்து படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரையும் மே 25-ம் தேதியன்று வெளியிட்டார்கள். மும்பை தாதாவாக ரஜினி நடித்திருக்கும் 'காலா' படம் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
தொடர்ந்து மும்பை, சென்னை ஆகிய இடங்களில் படப்பிடிப்பு நடைபெற்று முடிந்தது. படத்தை முதலில் 2018-ம் ஆண்டு கோடை விடுமுறையில் வெளியிட திட்டமிட்டிருந்தார்கள். ஆனால், ஜனவரி மாதம் 25-ம் தேதி வெளியாக வேண்டிய '2.O' படத்தின் கிராqபிக்ஸ் வேலைகள் முடிவடையாததால் அப்படத்தின் வெளியீட்டை கோடை விடுமுறைக்குத் தள்ளி வைத்தனர்.
கடந்த சில வாரங்களாகவே ரஜினிகாந்த், அடுத்தடுத்து நடித்து முடித்துள்ள '2.O', ''காலா' ஆகிய படங்கள் எப்போது வெளிவரும் என்று பேச்சு இருந்தது. அதோடு, 'காலா' படத்தை '2.Oஓ' படத்தைத் தயாரித்து வரும் லைகா ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனமே வாங்கிவிட்டதாகவும் தகவல்கள் வெளியாகின. ஆனால், அது உறுதி செய்யப்படாமலேயே இருந்தது.
இதனிடையே, பத்து நாட்களுக்கு முன்பாக '2.O' படம் ஏப்ரல் வெளியீடு என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. அதையடுத்து 'காலா' படம் ஆகஸ்ட் மாதம் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இன்று ரஜினிகாந்தின் பிறந்தநாளை முன்னிட்டு 'காலா' தயாரிப்பாளர் தனுஷ் செகண்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளார். அதில் லைகா ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் பெயரும் இடம் பெற்றுள்ளது. இதன் மூலம் 'காலா' படத்தை அந்நிறுவனம் வாங்கியுள்ளது அதிகாரப்பூர்வமாக வெளிவந்துள்ளது.    

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages