அரச தொழிலை இழந்தவர்களுக்கு மீண்டும வாய்ப்பு - இம்மாதம் 31ம் திகதியுடன் நிறைவடையவுள்ளது - Trincoinfo

புதிய தகவல்கள்

Post Top Ad

Post Top Ad

Monday, December 4, 2017

அரச தொழிலை இழந்தவர்களுக்கு மீண்டும வாய்ப்பு - இம்மாதம் 31ம் திகதியுடன் நிறைவடையவுள்ளது


நாட்டில் நிலவிய அசாதாரண சூழ்நிலையினால் அரச தொழில்வாய்ப்புக்களை இழந்தவர்கள் மீண்டும் தொழிலுக்கு விண்ணப்பிப்பதற்காக வழங்கப்பட்ட கால எல்லை இம்மாதம் 31ம் திகதியுடன் நிறைவடையவுள்ளதாக பொது நிர்வாக அமைச்சு அறிவித்துள்ளது.
1983ம் ஆண்டு ஜூலை மாதத்திற்கு பின்னரான அசாதாரண சூழ்நிலை தொடக்கம் யுத்தம் நிறைவடைந்த 2009ம் ஆண்டு மே மாதம் வரையிலான காலப்பகுதிக்குள் நாட்டில் நிலவிய யுத்த நிலைமைக்காரணமாக உள்ளூராட்சி சேவையில் உள்ள அரச அலுவலகங்கள், கூட்டுத்தாபனங்கள் மற்றும் சபைகளில் பணியாற்றி தொழில் வாய்ப்பை இழந்த அரச ஊழியர்கள் தமது தொழிலை மீண்டும் வழங்குமாறு கோரி விண்ணப்பிப்பதற்கான வாய்ப்பு பொது நிர்வாக அமைச்சு ஏற்படுத்திக்கொடுத்தது.
பொது நிர்வாக அமைச்சின் 4/ 2006, 4/ 2006(1), 4/ 2006 (11) ஆகிய சுற்றரிக்கைகளுக்கமைய மேன்முறையீடுகள் சமர்ப்பிக்கப்பட்டு அவை நிராகரிக்கப்பட்டிருப்பின் அல்லது குறித்த காலப்பகுதிக்குள் மேன்முறையீடு சமர்ப்பிக்க முடியாது போயிருப்பின் மீண்டும் இம்மாதம் 31ம் திகதி வரையில் சமர்ப்பிப்பதற்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. சத்திய கடதாசியுடன் தத்தமு நிறுவன, திணைக்கள தலைவர்களுக்கு விண்ணப்பிக்க முடியும்.
மேன்முறையீடு சமர்ப்பிக்கப்படப்படும் போது பாதுகாப்பு அமைச்சின் பாதுகாப்பு தடை நீக்கப்பட்டு வழங்கப்பட்ட சான்றிதழையும் உரிய அலுவலர் சமர்ப்பிப்பது கட்டாயமாகும். சமர்ப்பிக்கப்படும் அலுவர் 60 வயதுக்கு குறைந்தவராயின் மேன்முறையீடு ஏற்றுக்கொள்ளப்பட்டால் ஓய்வூதியம் பெறுவதற்கான வாய்ப்பு வழங்கப்படவேண்டும் என்றும் திணைக்கள தலைவர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு தொழில் இழந்த ஒருவர் உயிரிழந்திருப்பின் அவர் சார்பாக அவரில் தங்கி வாழ்ந்த குடும்பத்தினர் விண்ணப்பித்தால் அவர் சார்பாக தங்கி வாழும் குடும்பத்தினருக்கு பணிக்கொடை மற்றும் ஓய்வூதியம வழங்கப்படும்.
அரசின் இச்சலுகையை பணியிழந்து தற்போது வௌிநாடுகளில் தஞ்சம் புகுந்துள்ளவர்களும் பெற்றுக்கொள்ள முடியும் என்று அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages