2018 இல் 7000 பேருக்கு சமுர்த்தி நியமனம் - Trincoinfo

புதிய தகவல்கள்

Post Top Ad

Post Top Ad

12/02/2017

2018 இல் 7000 பேருக்கு சமுர்த்தி நியமனம்


2018 ஆம் ஆண்டில் ஏழாயிரம் பேருக்கு சமுர்த்தி நியமனம் வழங்கப்பட உள்ளதாக சமுர்த்தி அபிவிருத்தி பிரதி அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் (27) இடம்பெற்ற சமுர்த்தி அபிவிருத்தி அமைச்சு மீதான 2018 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட குழுநிலை விவாதத்தில் உரையாற்றியபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
75 ஆயிரம் பேரளவில் சமுர்த்தி அதிகாரி நியமனம் தொடர்பான பரீட்சைக்குத் தோற்றியுள்ளதாக பிரதி அமைச்சர் தெரிவித்துள்ளார்.
அவர்களில் முதற்கட்டமாக கடந்த 15 ஆம் திகதி ஆயிரத்து 904 சமுர்த்தி அதிகாரிகளுக்கு அமைச்சரவை அனுமதியுடன் நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.
இந்த நிலையில், அடுத்த கட்டமாக ஏழாயிரம் பேருக்கு சமுர்த்தி நியமனங்களை வழங்க நடவடிக்கை எடுக்க சமுர்;த்தி அபிவித்தி அபிவிருத்தி அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க உறுதியளித்துள்ளதாகவும் பிரதி அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க தெரர்pவித்துள்ளார்.
நாட்டில் 14 இலட்சத்துக்கும் அதிகமான சமுர்;த்தி பயனாளிகள் உள்ளதாகவும், அவர்களின் நலன்கருதி நாடுமுழுவதும் ஆயிரத்து 77 சமுர்த்தி வங்கிகள் நிறுவப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages