பட்டதாரிகள் 15 000 விரைவில் தொழில்வாய்ப்பு - Trincoinfo

புதிய தகவல்கள்

Post Top Ad

Post Top Ad

12/11/2017

பட்டதாரிகள் 15 000 விரைவில் தொழில்வாய்ப்பு


விரைவில் 15000 பட்டதாரிகளுக்கு தொழில் வாய்ப்புக்களை வழங்க எதிர்பார்த்துள்ளதாக கல்வியமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.
அபேகம வளாகத்தில் இடம்பெற்ற பட்டதாரி ஆசிரியர்களுக்கு நியமனம் வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் இதனை தெரிவித்தார். இதன்போது 1288 பட்டதாரிகளுக்கு ஆசிரியர் நியமனங்கள் கையளிக்கப்பட்டன.
பாடசாலை கல்வி மட்டத்தை மேம்படுத்த அனைத்து கல்வி வலயங்களிலும் மேலதிக ஆசிரியர்களுக்கான அமைப்பொன்று உருவாக்கப்படும். மேலும் கல்வியமைச்சின் கீழுள்ள அனைத்து வெற்றிடங்களுக்கும் ஆட்சேர்ப்பு செய்வதற்காக வருடம் தோறும் வர்த்தமானி அறிவித்தல் வௌியிடப்படும்.
இவ்வரசாங்கத்தினால் வழங்கப்பட்ட நியமனங்கள் அரசியல் தலையீடுகள் இன்றி வழங்கப்பட்டுள்ளமை பெறுமைக்குரிய விடயம் என்றும் அமைச்சர் இதன்போது சுட்டிக்காட்டினார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages