Latest News

பிட்காயின் – ஒரு விரிவான விளக்கம் www.TRINCOINFO.com$பிட்காயின் என்பது மின்னனு உலகில் உருவாக்கப்பட்டு நடைமுறையில் இருக்கும் ஒரு டிஜிட்டல் வடிவ நாணயம்
யாரும் அதை கட்டுப்படுத்துவதில்லை.

$பணம் மற்றும் நாணயம் போல அச்சிடப்படுவது இல்லை.
கணித சிக்கல்களைத் தீர்க்கக்கூடிய ஒரு மென்பொருள் மூலம் மக்களால், அதிகரிக்கும் தொழில் வளர்ச்சியால், உலகம் முழுக்க இயங்கும் கணினிகளால் பிட்காயின் தயாரிக்கப்படுகிறது.

#மற்ற நாணயங்களில் இருந்து பிட்காயின் எவ்வாறு வேறுபடுகிறது?

$மின்னணு முறையில் பொருட்களை வாங்க பிட்காயின் பயன்படும்.

$அந்த வகையில், இது டாலர், யூரொ, ரூபாய் போன்ற நாணயம், மின்னணு முறையிலும் வர்த்தகம் செய்ய உதவும்.
எனினும், வழக்கமான நாணயங்களிலிருந்து பிட்காயின் வேறுபட்டு விளங்க இன்னொரு முக்கிய பண்பு இது பரவலாக்கப்பட்டுள்ளது என்பதுதான்.

$எந்த ஒரு நிறுவனமும் பிட்காயினை கட்டுப்படுத்துவது இல்லை.இது சிலருக்கு வசதியாக இருக்கிறது, ஏனெனில் அவர்களது பெருமளவிலான பணத்தை வங்கிகளாலும் கட்டுப்படுத்த முடியாது.

#பிட்காயின் உருவாக்கியது யார்?

$முதல் பிட்காயின் விவரக்குறிப்பு மற்றும் மாதிரி வடிவம் 2009-ம் ஆண்டு வெளியிடப்பட்டது, பின்பு 2010-ம் ஆண்டு மென்பொருள் வெளியானது.

$தன்னைப் பற்றி தகவல் வெளியிடாத ஒருவரால் சடோஷி நகமோட்டா என்ற புனைபெயருடன் இம்மென்பொருள் வெளிவந்தது.

அன்று முதல் இந்த பிட்காயின் சமூகம் அதிவிரைவாக வளர்ந்து வருகின்றது.

#பிட்காயின் அச்சிடுவது யார்?

$யாரும் இல்லை.

$இந்த நாணயம் எந்த ஒரு வங்கியாலும் யாருக்கும் தெரியாமல் அச்சிடப்பட்டு, மக்களிடம் புழக்கத்திற்கு வராமல், தனக்கான விதிகளை அமைத்து கொள்வதில்லை.

$வங்கிகள் தங்களது நாட்டின் கடன் சுமையை குறைக்க தொடர்ந்து நாணயங்களையும், பணத்தையும் அச்சிடுகின்றன, அது அந்நாட்டு பணத்தின் மதிப்பை குறைக்கவே செய்யும்.

$மாறாக, பிட்காயின் மின்னணு முறையில் குறிப்பிட்ட குழுவால் தயாரிக்கப்படுகிறது. அக்குழுவில் யார்வேண்டுமானாலும் உறுப்பினர் ஆகலாம்.

$பிட்காயின், விநியோகிக்கப்பட்ட வலைப்பின்னலில் (distributed network) உள்ள கணினியின் திறன்கொண்டு “வெட்டி” எடுக்கப்படுகின்றது.

$மறைபணம் (virtual currency) கொண்டு இந்த வலைப்பின்னலானது பல பரிவர்த்தனைகளை செய்வதன் மூலம் பிட்காயின் தனது சொந்த கட்டண வலைப்பின்னலை திறம்பட உருவாக்கி வருகிறது.
எனவே நீங்கள் வரம்பற்ற பிட்காயின்களைக் கடைந்தெடுக்க முடியாது

$ஆம், பிட்காயின் நெறிமுறை (protocol) – பிட்காயின்களை செயல்படுத்தும் விதிகள் – 21 மில்லியன் பிட்காயின்கள் மட்டுமே இதுவரை உருவாக்கப்பட்டுள்ளன.
எனினும் இவை சிறு சிறு பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளன. (அதாவது ஒவ்வொரு பிட்காயினை 0.00000001 பகுதிகளாகப் பிரித்துள்ளனர்) இந்த ஒரு பகுதியானது “சடோஷி” எனப் பெயரிடப்பட்டுள்ளது.

பிட்காயின் எதன் அடிப்படையில் தயாரிக்கப்படுகின்றது?

 $வழக்கமான பணம் தங்கம் அல்லது வெள்ளியின் அடிப்படையில் தயாரிக்கப்படும்.

$கோட்பாட்டளவில், பணத்தை வங்கிகளில் செலுத்தி தங்கமோ, வெள்ளியோ பெற்றுக்கொள்ளலாம் (இது நடைமுறையில் இல்லை)

$ஆனால் பிட்காயின் தங்கத்தின் அடிப்படையில் தயாரிக்கப்படுவதில்லை, மாறாக கணிதத்தின் அடிப்படையில் தயாரிக்கப்படுகிறது.

$பிட்காயின் தயாரிக்க உதவும் கணித வாய்ப்பாட்டை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்ட பல்வேறு மென்பொருட்களை உலகம் முழுவதும் பயன்படுத்தி வருகின்றனர்.

$இந்த கணித வாய்ப்பாடு இலவசமாக இணையத்தில் கிடைக்கின்றது, யார்வேண்டுமானாலும் பார்க்கலாம்.
திறந்த மூல மென்பொருள் (open source software) ஆதலால் யார்வேண்டுமானாலும் இதன் செயல்பாட்டை சரிபார்க்க முடியும்.

வேகமாக பரவி வரும் பிட்காயின் பற்றி நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டியவை

$சர்வதேச வணிகம் குறித்து நோக்கி வருபவர்களுக்கு பரீட்சயமான வார்த்தைதான் பிட்காயின் (Bitcoin).

$1990களின் இறுதியில் டிஜிட்டல் பரிவர்த்தனைகள் நிகழ்ந்த தொடக்கத்தில் பணப்பறிமாற்றத்தில் பல குளறுபடிகள், மோசடிகள் நடந்தன.

$100 ரூபாயை ஒருவருக்கு அனுப்பினால், அனுப்பப்படும் ஃபைலை வைத்து, மேலும் பல பிரதிகள் எடுத்தனர்.
இதிலிருந்து தப்பிக்கவே பிட்காயின் என்ற மெய்நிகர் பணம் உருவாக்கப்பட்டது.

$இந்த பிட்காயின்தான் டிஜிட்டல் பரிவர்த்தனையின் முன்னோடியாகவும், அதன் தொடக்கப் புள்ளியாகவும் இருந்தது.

$பிளாக் செயின் என்ற தொழில்நுட்பத்தின் அடிப்படையில் இந்த பிட்காயின் பரிவர்த்தனைகள் மேற்கொள்ளப்பட்டன.
ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு விதமான கரன்சி இருக்கிறது. ஆனால் இந்த பிட்காயின் என்பது சர்வதேச கரன்சி ஆகும்.

$எந்த நாட்டிலும் இந்த கரன்சியை மாற்றிக்கொள்ள முடியும்.

$எந்த இடத்திலிருந்தும் இந்த பிட்காயின் மூலம் ஷாப்பிங் செய்ய முடியும். யாருக்கும் எங்கிருந்தும் பணம் அனுப்ப முடியும்.

$இதை கண்டுபிடித்து யார் என்று இன்று வரையிலும் தெரியவில்லை.

$இதை கண்டுபிடித்தது ஒருவரா அல்லது ஒரு குழுமமா? என்பது கண்டறியப்படவில்லை.

$ஆனால் சந்தோஷி நகமோடோ என்ற பெயரில் பிட்காயின் மற்றும் அதன் மென்பொருளை வெளியிட்டார்கள்.

$இதன் மூலம் ஒருவர் யாருக்கும்? எந்த நாட்டில் வசிப்பவருக்கும் பணத்தை அனுப்ப முடியும்.

$இந்த பரிவர்த்தனையை மூன்றாவது நபர் யாராலும் கண்டுபிடிக்க இயலாது. திருடவும் முடியாது.

$இந்த தொழில்நுட்பத்தின் அடிப்படையில் பரிவர்த்தனைகளை நிகழ்த்தித் தரும் நிறுவனங்களுக்கு மைனிங் நிறுவனங்கள் என்று பெயர்.

$பிட்காயின் பரிவர்த்தனையை விவரிக்கும் வரைபடம்.
உலகம் முழுக்க ஒவ்வொரு வினாடிக்கும் இந்த பிட்காயின் பரிவர்த்தனைகள் நிகழ்ந்துகொண்டே இருக்கும்.

$இதனை நிகழ்த்தும் பிளாக்செயின் இயக்க தளமானதின் பரிவர்த்தனைகள் அனைத்தும் புதிர் வடிவிலே இருக்கும்.
ஒவ்வொரு பத்து நிமிடங்களுக்கும் நடக்கும்

$பரிவர்த்தனைகள் அனைத்தும் ஒரு லட்ஜரில் பதிவேற்றப்படும்.

$அடுத்த பத்து நிமிடங்களுக்கு நடக்கும் பரிவர்த்தனைகள் அடுத்த லெட்ஜரில் பதிவேற்றபடும்.

$மைனிங் நிறுவனங்களுக்கு ஒவ்வொரு பத்து நிமிடங்களுக்கும் 12.5 பிட்காயின்கள் வழங்கப்படும்.

சமீபத்தில்தான் ஐசிஐசிஐ உள்ளிட்ட சில பிரபல வங்கிகள் பிட்காயின் பரிவரிதனைகளுக்கான சோதனைகளை நடத்தியன..

*************************************************


  • Blogger Comments
  • Facebook Comments

0 comments:

Post a Comment

Item Reviewed: பிட்காயின் – ஒரு விரிவான விளக்கம் www.TRINCOINFO.com Description: Rating: 5 Reviewed By: ST
Scroll to Top