எனக்கு வரும் செய்திகள் கவலை அளிக்கிறது... கமல் டிவிட்டரில் கலக்கம் www.TRINCOINFO.com - Trincoinfo

புதிய தகவல்கள்

Post Top Ad

Post Top Ad

11/01/2017

எனக்கு வரும் செய்திகள் கவலை அளிக்கிறது... கமல் டிவிட்டரில் கலக்கம் www.TRINCOINFO.com


சென்னையில் வெள்ளம் வர இருப்பதாக வெளியாகும் செய்திகள் தனக்கு கவலை அளிப்பதாக நடிகர் கமல்ஹாசன் டிவிட்டரில் தெரிவித்து இருக்கிறார். கனமழை குறித்து டிவிட்டரில் கவலை தெரிவித்து இருக்கும் அவர் இது மக்களுக்கும் அரசுக்கும் கொடுக்கப்பட்டிருக்கும் முன்னறிவிப்பு என்று கூறியிருக்கிறார். தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தற்போது தொடங்கி இருக்கிறது. இதையடுத்து தமிழ்நாட்டின் பல பகுதிகளில் மிகவும் அதிக அளவில் மழை பெய்து வருகிறது. தமிழ்நாட்டில் பெய்த மோசமான மழை காரணமாக பல இடங்களில் சிறிய அளவில் வெள்ளம் ஏற்பட்டு இருக்கிறது. மேலும் பல பகுதிகளில் இருக்கும் பல ஏரிகள் நிரம்பி இருப்பதால் வெள்ளம் ஏற்படும் வாய்ப்பு ஏற்பட்டு இருக்கிறது.

இந்த நிலையில் சென்னையின் பல பகுதிகள் முழுக இருக்கின்றன என்ற தகவலை அதிர்ச்சி அடைந்துள்ளதாக நடிகர் கமல்ஹாசன் டிவிட்டரில் தெரிவித்து இருக்கிறார். அதில் அவர் ஒரு "ஸ்கிரீன்சாட்'' ஒன்றை பகிர்ந்து இருக்கிறார். அதில் சென்னையில் உடைய காத்திருக்கும் ஏரிகளின் பட்டியல் கொடுக்கப்பட்டு இருக்கின்றது. அதை பகிந்துள்ள கமல்ஹாசன் ''இது மக்களுக்கும், அரசுக்கும் கொடுக்கப்படும் முன்னெச்சரிக்கை தகவல் என்று கூறியுள்ளார். மேலும் மக்களும், அரசும் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். வருமுன் காக்க வேண்டும். எனக்கு அவரும் செய்திகள் மிகவும் கவலை அளிக்கின்றன'' என்று கவலையாக எழுதியிருக்கிறார். இது அரசுக்கும் மக்களுக்கும் கொடுக்கப்படும் முன்னறிவிப்பு. உடனே செயல் பட்டால் வருமுன் காப்பதாகும். எனக்கு வரும் செய்திகள் கலவலை அளிக்கின்றன.

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages