இந்திய அணிக்கு தேர்வாகியுள்ள திருநெல்வேலி தமிழன் - Trincoinfo

புதிய தகவல்கள்

Post Top Ad

Post Top Ad

11/21/2017

இந்திய அணிக்கு தேர்வாகியுள்ள திருநெல்வேலி தமிழன்


இலங்கை அணிக்கு எதிரான கடைசி இரண்டு டெஸ்ட் போட்டிகளில் தமிழக வீரரும் பண்முக ஆட்டக்காரருமான விஜய் சங்கர் தெரிவு செய்யப்பட்டுள்ளார்,
இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கிடையேயான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது.
இதில் இரு அணிகளுக்கிடையே நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டி டிராவில் முடிவடைந்ததைத் தொடர்ந்து இரண்டாவது டெஸ்ட் போட்டி நாக்பூரில் வரும் 24-ஆம் திகதி நடைபெறவுள்ளது.
இந்நிலையில் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளரான புவனேஸ்வர்குமாருக்கு திருமணம் நடைபெறவுள்ளதால், அவர் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் இருந்து விலகியுள்ளார்.
அதே போன்று இந்திய அணியின் துவகக் ஆட்டக்காரரான தவான் தனிப்பட்ட காரணங்களால் அணியில் இருந்து விலகியுள்ளார்.
இதில் புவனேஸ்வர் குமாருக்கு பதிலாக தமிழக அணியின் பண்முக ஆட்டக்காரரான விஜய் சங்கர் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது, தெரிவு செய்யப்பட்டுள்ள விஜய் திருநெல்வேலியைச் சேர்ந்தவர்.
கடந்த 2017-ஆம் ஆண்டு நடந்த ஐபிஎல் போட்டியில் ஹைதராபாத் அணிக்காக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.


No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages