ஹாலிவுட்டில் நம்ம 'மாரி'... - ஃபர்ஸ்ட் லுக் வெளியானது! - Trincoinfo

புதிய தகவல்கள்

Post Top Ad

Post Top Ad

11/02/2017

ஹாலிவுட்டில் நம்ம 'மாரி'... - ஃபர்ஸ்ட் லுக் வெளியானது!


தனுஷ் முதன்முதலாக நடித்துள்ள ஹாலிவுட் படம் 'தி எக்ஸ்ட்ராடினரி ஜர்னி ஆஃப் ஃபகிர்'. கனடா நாட்டைச் சேர்ந்த கென் ஸ்காட் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப்படம், ரொமான்டிக் காமெடி படமாக உருவாகிவருகிறது. இப்படத்தில் அஜாதசத்ரு எனும் கேரக்டரில் தனுஷ் நடிக்கிறார். அஜாதசத்ரு ஒரு மேஜிக் மேன் கேரக்டராம். தெருவில் மேஜிக் நிகழ்ச்சி நடத்தும் கலைஞராக இந்தப் படத்தில் நடித்திருக்கிறார் தனுஷ்.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் நடைபெற்று வரும் நிலையில் இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது.

தனுஷுக்கு இப்போது ஏறுமுகம். இயக்குநர், தயாரிப்பாளர் என தொட்டதெல்லாம் துலங்கும் நிலையில், ஹாலிவுட் நடிகராகவும் தன்னை அறிமுகப்படுத்திக்கொள்ள இருக்கிறார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages