அரச பாடசாலை விளையாட்டு ஆசிரியர்களுக்கான நேர்முகத்தேர்வு - Trincoinfo

புதிய தகவல்கள்

Post Top Ad

Post Top Ad

Thursday, November 16, 2017

அரச பாடசாலை விளையாட்டு ஆசிரியர்களுக்கான நேர்முகத்தேர்வு


கல்வி அமைச்சிற்குட்பட்ட பாடசாலைகளில் விளையாட்டு துறை ஆசிரியர்களுக்கான வெற்றிடத்தை பூர்த்தி செய்வதற்காக விளையாட்டு பயிற்றுவிப்பாளர்களுக்கான நேர்முகப்பரீட்சை தற்பொழுது நடைபெறுகின்றது.
பனாகொடை இராணுவ மத்திய நிலையத்தில் இடம்பெறும் இந்த நேர்முகப்பரீடசையில் சுமார் 8ஆயிரம் பரீட்சார்த்திகள் கலந்துகொண்டுள்ளனர்.

எழுத்துமூலமான பரீட்சைக்கு பின்னர் உடற்தகுதி பரீட்சை தற்பொழுது நடைபெறுகின்றது.
இதுவரையில் மன்னார் யாழ்ப்பாணம் , முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களை சேர்ந்த 800 இளைஞர் யுவதிகள் தமிழ் மொழி விளையாட்டு பயிற்சியாளர்களுக்கான நேர்முகப்பரீட்சையில் கலந்துகொண்டுள்ளனர்.
நேர்முகப்பரீட்சைக்கு பின்னர் ஆறு மாதகால பயிற்சியை பூர்த்தி செய்வதை அடுத்து இவர்கள் சேவையில் இணைத்துக்கொள்ளப்படுவர்.
3868 விளையாட்டு பயிற்றுவிப்பாளர்கள் பாடசாலைகளில் நியமிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages