இலவச சிவ தொண்டர் பயிற்சி நெறிக்கான விண்ணப்பம் கோரல் - Trincoinfo

புதிய தகவல்கள்

Post Top Ad

Post Top Ad

Tuesday, November 7, 2017

இலவச சிவ தொண்டர் பயிற்சி நெறிக்கான விண்ணப்பம் கோரல்

 ஆன்மீகம் மற்றும் மானுட மேம்பாட்டுடன் தொடர்புடைய அறிவை மேம்படுத்தி அவ் அறிவைப் பெற்றவர்களைப் பயன்படுத்தி சமூகத்தில் ஆன்மீகம் மற்றும் மானுட மேம்பாட்டுடன் தொடர்புடைய வேலைத் திட்டங்களை மேற்கொள்வதற்காக நான்கு நாட்கள் வதிவிடப் பயிற்சி நெறியோன்று, எதுவித கட்டணமுமின்றி, தொண்டைமானாற்றில் அமைந்துள்ள செல்வச் சந்நிதியான் ஆச்சிரமத்தில், சிவன் மானுட மேம்பாட்டு நிறுவனத்தின் நெறிப்படுத்தலில் நடத்தப்படவுள்ளது.
2017 ஆம் ஆண்டு மார்கழி மாதம் நடத்தப்படவுள்ள மேற்குறிப்பிட்ட பயிற்சி தொடர்பான சில முக்கிய விபரங்கள் வருமாறு,
முதல் நாள் வழங்கப்படும் சமய தீட்சையைத் தொடர்ந்து மூன்று நாட்கள் பயிற்சி நடைபெறும்.பயிற்சிக்கான விண்ணப்பங்கள் கிடைத்ததும் பயிற்சி தொடர்பான விளக்கம் அடங்கிய அனுமதிக் கடிதம் அனுப்பப்படும்.
பயிற்சி நடைபெறும் ஒரு நாள் பயிற்சியாளர் அனைவரும் குடாநாட்டிலுள்ள பிரசித்தி பெற்ற வழிபாட்டுத் தலங்களுக்கு தல யாத்திரைக்காக அழைத்துச் செல்லப்படுவார்கள்.
21 வயதிற்கு மேற்பட்ட ஆண், பெண் இரு பாலாரும் விண்ணப்பிக்கலாம்.
இலங்கையின் எல்லாப் பாகத்திலிருந்தும் விண்ணப்பங்கள் பெறப்படும்.
பயிற்சியில் கலந்து கொள்ளும் அனைவரும் சமய தீட்சை பெறுவதற்கும் பயிற்சி வேளையில் வழங்கப்படும் சமய தீட்சை பெற்ற அன்றிலிருந்து தொடர்ந்து 21 நாட்களுக்கு சைவ உணவு மட்டுமே அருந்துவதற்கும் உறுதி கொண்டவர்களாயிருத்தல் வேண்டும்.
இப்பயிற்சிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் தபால் மூலம் விண்ணப்பப் படிவத்தைக் கோரி சிவன் மானுட மேம்பாட்டு நிறுவனம், 48, புனித மரியாள் வீதி, திருக்கோணமலை எனும் முகவரிக்கு கடிதம் அனுப்ப வேண்டும்.
அக் கடிதத்தில் விண்ணப்பிப்பவரின் முகவரியும் தொலைபேசி இலக்கமும் பதியப்பட வேண்டும்.
ரூபா 10 முத்திரை ஒட்டிய சுய விலாசமிட்ட நீட்டு தபால் உறை ஒன்றையும் விண்ணப்பக் கடிதத்துடன் இணைத்து அனுப்ப வேண்டும்.
பயிற்சியை நிறைவு செய்து சான்றிதழ் பெறுபவர்கள் சமயம், சமூகம் சார்ந்த தொண்டுச் செயற்பாடுகளில் தத்தம் மாவட்டங்களில் ஈடுபட வேண்டும்.
விண்ணப்பப் படிவம் எமக்குத் தபால் மூலம் கிடைக்க வேண்டிய கடைசி நாள் 24.11.2017 பி.ப. 4.00 மணி.
பயிற்சியாளர்கள் அனைவருக்கும் சந்நிதி முருகனைத் தரிசித்து அவன் அருளையும் பெறும் வாய்ப்பு உண்டு என சிவன் மானுடமேம்பாட்டு நிறுவன செய்திக் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
-thinakaran-

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages