இளைஞர், யுவதிகளுக்கு நிரந்தர வேலைவாய்ப்பு - Trincoinfo

புதிய தகவல்கள்

Post Top Ad

Post Top Ad

11/16/2017

இளைஞர், யுவதிகளுக்கு நிரந்தர வேலைவாய்ப்பு500 கோடி ரூபா நிதி ஒதுக்கீடு
இளைஞர் யுவதிகளுக்கு நிரந்தர வேலைவாய்ப்புக்களை பெற்றுக்கொடுக்கும் வகையில் ஏற்றுமதி செயற் திட்டங்களை பலப்படுத்தும் திட்டங்களுக்கென அரசாங்கம் 500 கோடி ரூபாவை இந்த ஆண்டு ஒதுக்கியுள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
இந்த வேலைத் திட்டத்தில் முதலீட்டாளர்களை ஊக்குவிக்கும் வகையில் புதிய இறைவரி சட்டத்தின் கீழ் நிவாரணங்கள் பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளதாக பிரதமர் தெரிவித்தார்.
இத்திட்டத்தின் கீழ் புதிதாக வர்த்தக முயற்சிகளை ஆரம்பிக்கும் முதலீட்டாளர்களுக்கு 100 க்கு 200 வீதம் மூலதனக் கொடுப்பனவுகளை இரண்டு வருடங்களுக்கு பெற்றுக்கொடுக்கவுள்ளதாகவும் பிரதமர் தெரிவித்தார். அதேவேளை, போட்டித் தன்மைக்காக முதலீட்டாளர்களை ஊக்குவிப்பதுடன் தனியாக அபிவிருத்தி வங்கி உருவாக்கப்பட்டு அதன் மூலம் நிதி பெற்றுக்கொடுக்கப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
தெற்காசியாவின் பாரிய ஆடை உற்பத்தி கண்காட்சி “இன்டெக்ஸ் ஏசியா 2017” நேற்று கொழும்பு கண்காட்சி மற்றும் மாநாட்டு மண்டபத்தின் ஆரம்பமானது. இக்கண்காட்சியை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்து உரையாற்றுகையிலேயே பிரதமர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க,
முதலீட்டாளர்களுக்கு வெளிநாட்டு சந்தை வாய்ப்பை பெற்றுக்கொடுப்பதற்கும் சர்வதேச ஏற்றுமதி கைத்தொழில் மற்றும் தேவைகள் எமது நாட்டிற்கு பெற்றுக்கொள்ளவதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும்.
இதற்கென வெளிநாடுகளுடன் உடன்படிக்கைகளை மேற்கொள்வது அவசியமாகும். இதற்கான தேவைப்படும் பயிற்சி வேலைத் திட்டங்களை முன்னெடுப்பதற்கு இம்முறை வரவு செலவுத் திட்டத்தில் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. (ஸ)

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages