தொழிற்கல்வி ஆசிரியர்களுக்கான விண்ணப்பம் கோரல் - Trincoinfo

புதிய தகவல்கள்

Post Top Ad

Post Top Ad

11/10/2017

தொழிற்கல்வி ஆசிரியர்களுக்கான விண்ணப்பம் கோரல்

 
தேசிய மற்றும் மாகாண பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் வெற்றிடங்களை பூர்த்தி செய்வதற்கான திறந்த போட்டிப்பரீட்சைக்கான விண்ணப்பங்கள் பட்டதாரிகளிடமிருந்து கோரப்பட்டுள்ளன.
தொழிற்கல்வி பாடநெறிகளுக்காக ஆசிரியர் சேவை தரம் 3 – 1 இற்கு தமிழ் மற்றும் சிங்கள மொழி மூலம் பட்டதாரிகளை இணைத்துக்கொள்வதற்கே விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
இன்றைய தினம் (10) வௌியான வர்த்தமானியில் மேலதிக விபரங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. அதில் காணப்படும் மாதிரி விண்ணப்படிவத்திற்கேற்ப தயாரிக்கப்பட்ட விண்ணப்பங்களை எதிர்வரும் டிசம்பர் மாதம் 11ம் திகதிக்கு முன்னர் பரீட்சை ஆணையாளர் நாயகம், ஏற்பாடு மற்றும் வௌிநாட்டு பரீட்சை பிரிவு, இலங்கை பரீட்சைத் திணைக்களம், த.பெ இலக்கம் 1503, கொழும்பு என்று முகவரிக்கு அனுப்பி வைக்குமாறு கோரப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages