நயன்தாரா நடிக்கும் 'அறம்' ட்ரெய்லர் ரிலீஸ்! - ஷார்ப்பான வசனங்களால் சிக்கல் வருமா? - Trincoinfo

புதிய தகவல்கள்

Post Top Ad

Post Top Ad

11/01/2017

நயன்தாரா நடிக்கும் 'அறம்' ட்ரெய்லர் ரிலீஸ்! - ஷார்ப்பான வசனங்களால் சிக்கல் வருமா?

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிப்பில் கோபி நயினார் இயக்கி இருக்கும் 'அறம்' படத்தில் சமூகத்தின் முக்கிய பிரச்னையான தண்ணீர் பஞ்சம் பற்றிப் பேசப்பட்டிருக்கிறது. இந்தப் படத்தை கொட்டப்படி ஜே.ராஜேஷ் தயாரித்துள்ளார்.
 
விக்னேஷ், ரமேஷ், சுனு லெட்சமி, வினோதினி உள்ளிட்ட பலரும் நடித்திருக்கும் இந்தப் படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்திருக்கிறார். ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு பலமுறை தள்ளிப்போன அறம்' படம் வருகிற நவம்பர் 10-ம் தேதி வெளியாக இருப்பது உறுதியாகி இருக்கிறது.
இந்நிலையில், 'அறம்' படத்தின் ட்ரெய்லர் சற்றுமுன்பு அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது. அரசியல்வாதிகளை சாடும் வகையில் இருக்கும் வசனங்களால் படம் பிரச்னை இல்லாமல் ரிலீஸ் ஆகுமா என்பதைப் பொறுத்திருந்து பார்க்கலாம்.

'அறம்' படம் குடிநீர் பஞ்சம் பற்றிய பிரச்னையை மையமாகக் கொண்ட கதையில் உருவாகியுள்ளது. ராமநாதபுரம் மாவட்ட கலெக்டராக அரசியல்வாதிகளை எதிர்க்கும் கேரக்டரில் நயன்தாரா நடித்திருக்கிறார். 'இந்தக் கதையில் அரசியலும் உள்ளது. அதனால் ஒரு முன்னணி நடிகை நடித்தால்தான் எடுபடும் என்பதால் நயன்தாராவை நடிக்கவைத்தனராம். இந்தக் கதையை உள்வாங்கி இயல்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார் நயன்தாரா' என இயக்குநர் கோபி கூறியுள்ளார்.


No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages