கல்வியியற் கல்லூரிகளுக்கு 4766 மாணவர்களை உள்வாங்க திட்டம் - Trincoinfo

புதிய தகவல்கள்

Post Top Ad

Post Top Ad

11/06/2017

கல்வியியற் கல்லூரிகளுக்கு 4766 மாணவர்களை உள்வாங்க திட்டம்


கல்வியியற் கல்லூரிகளில் 2017/2018 கல்வியாண்டுகளுக்கு மாணவர்களை இணைத்துக்கொள்வதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ள நிலையில் நாடளாவிய ரீதியில் உள்ள கல்லூரிகளுக்கு 4766 பேர் அனுமதிக்கப்படவுள்ளனர் என்று கல்வியமைச்சு அறிவித்துள்ளது.
தமிழ் மொழி மூலம் 1371 பேரும் சிங்கள மொழி மொழி மூலம் 2470 பேரம் ஆங்கில மொழி மூலம் 925 பேரும் பயிற்சிக்கு உள்வாங்கப்படவுள்ளனர்.
இவர்கள் 32 பாடநெறிகளுக்காக 20 கல்வியியற் கல்லூரிகளில் உள்வாங்கப்படவுள்ளனர்.
தமிழ் மொழி மூலம் ஶ்ரீபாத கல்வியியற் கல்லூரி, வவுனியா, அட்டாளைச்சேனை, மட்டக்களப்பு, யாழ்ப்பாணம், தர்கா நகர் ஆகிய கல்லூரிகளிலும் ஆங்கில மொழி மூலம் நி்ல்வள, சிகன, யாழ்ப்பாணம், மகாவலி, பஸ்துன்ரட்ட, பேராதனை மற்றும் மஹரகம ஆகிய கல்லூரிகளிலும் மாணவர்கள் இணைத்துக்கொள்ளப்படவுள்ளனர்,
இவ் ஆசிரியர் பயிற்சி மாணவர்கள் எதிர்வரும் 2020ம் ஆண்டு நாடளாவிரீதியில் ஏற்படவுள்ள ஆசிரியர் வெற்றிடங்களை பூர்த்தி செய்ய பயன்படுத்தப்படவுள்ளனர் என்று கல்வியமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages