ஆசிரியர் ஆலோசகர் சேவைக்கு 4, 500 பேரை ஆட்சேர்க்க நடவடிக்கை - Trincoinfo

புதிய தகவல்கள்

Post Top Ad

Post Top Ad

11/26/2017

ஆசிரியர் ஆலோசகர் சேவைக்கு 4, 500 பேரை ஆட்சேர்க்க நடவடிக்கை

ஆசிரியர் ஆலோசகர் சேவைக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான அமைச்சரவை பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக கல்வி இராஜாங்க அமைச்சர் வேலுசாமி இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற கல்வி அமைச்சு மீதான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
தமிழ் மொழி மூலமாக ஆயிரத்து 283 பேரும் சிங்கள மொழிமூலமாக மூவாயிரத்து 188 பேரும் நியமனம் பெறுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் வேலுசாமி இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, இலங்கையின் கல்வி நிர்வாக சேவை அதிகாரிளை (எஸ்.எல்.ஈ.எஸ்) நியமிபபதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.
இலங்கையின் கல்வி நிர்வாக சேவையில் தமிழ்மொழிமூலமான அதிகாரிகள் 150 பேரும், சிங்கள மொழி மூலமான 444 அதிகாரிகளை நியமிப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்;;டு வருவதாக கல்வி இராஜாங்க அமைச்சர் வேலுசாமி இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages