எஸ்.ஐ பேசும் ஆபாச வாட்ஸ்-அப் ஆடியோ - 'திருட்டு பயலே -2' ட்ரெய்லர் ரிலீஸ்! - Trincoinfo

புதிய தகவல்கள்

Post Top Ad

Post Top Ad

11/17/2017

எஸ்.ஐ பேசும் ஆபாச வாட்ஸ்-அப் ஆடியோ - 'திருட்டு பயலே -2' ட்ரெய்லர் ரிலீஸ்!

சுசி கணேசன் இயக்கத்தில் பாபி சிம்ஹா, அமலா பால், பிரசன்னா ஆகியோர் நடித்திருக்கும் 'திருட்டு பயலே -2' படத்தின் ட்ரெய்லர் சற்று முன்பு அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது. சுசி கணேசன் இயக்கத்தில் ஜீவன், சோனியா அகர்வால், மாளவிகா ஆகியோர் நடிப்பில் 2006-ம் ஆண்டு வெளியான படம் 'திருட்டு பயலே'. கதையின் கருப்பொருளினால் சர்ச்சையை உண்டாக்கிய அதேநேரத்தில் வணிகரீதியாகவும் வெற்றி பெற்றது.

அதன் இரண்டாம் பாகமான 'திருட்டு பயலே -2' படத்தில் பாபி சிம்ஹா, பிரசன்னா, அமலாபால் ஆகியோர் நடித்திருக்கிறார்கள். கள்ளக்காதல் மற்றும் அதன் எதிரொலியால் நிகழும் சம்பவங்கள்தான் இந்தப் படத்தின் கதை எனச் சொல்லப்படுகிறது. இந்தப் படத்தில் பாபி சிம்ஹா போலீசாக நடித்திருக்கிறார். அடுத்தவர்கள் பேசுவதை ஒட்டுக் கேட்கும் காட்சிகளும் இந்த ட்ரெய்லரில் இடம்பெற்றிருக்கின்றன.சில ஆண்டுகளுக்கு முன்பு வாட்ஸ்-அப்பில் வைரலாகப் பரவிய ஆபாச ஆடியோவில், பாதிக்கப்பட்ட பெண்ணுடன் ஒரு எஸ்.ஐ பேசுவது பதிவு செய்யப்பட்டிருக்கும். அதே மாதிரியான காட்சி இந்தப் படத்திலும் இடம்பெற்றிருக்கிறது. இந்தப் படம் காவல்துறையினரை இழிவுபடுத்தும் விதமாக இருக்குமா என்பது தெரியவில்லை. படத்தில் சர்ச்சைக்குரிய காட்சிகள் இடம்பெற்றிருந்தால் பிரச்னை உருவாகவும் வாய்ப்பிருக்கும் எனத் தெரிகிறது.l

1 comment:

Post Bottom Ad

Pages