நவம்பரில் 1904 சமுர்தி அதிகாரிகள் நியமனம் www.TRINCOINFO.com - Trincoinfo

புதிய தகவல்கள்

Post Top Ad

Post Top Ad

11/01/2017

நவம்பரில் 1904 சமுர்தி அதிகாரிகள் நியமனம் www.TRINCOINFO.com


சமுர்தி அபிவிருத்தி திணைக்களத்திற்கு புதிய அபிவிருத்தி அதிகாரிகள் 1904 பேர் எதிர்வரும் நவம்பர் மாதம் 15ம் திகதி இணைத்துக்கொள்ளப்படவுள்ளனர் என்று சமுர்தி திணைக்களம் அறிவித்துள்ளது.
இணைத்துக்கொள்ளப்படும் அனைத்து அதிகாரிகளுக்கும் தலைமைத்துவ பயிற்சிகளை வழங்க சமூக வலுவூட்டல், நலனோன்புகை மற்றும் மத்திய மலைநாட்டு அபிவிருத்தி அமைச்சு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
தலைமைத்துவ பண்புகள், சமூக ஒழுக்கம், நிபுணத்துவ அபிவிருத்தி, சவால்களுக்கு முகங்கொடுக்க உளரீதியான தயார்படுத்தல், சரியான சமூக எதிர்பார்ப்புக்களை உருவாக்குதல், தொழில் வழிகாட்டல்கள், உள சமநிலைத்தன்மையை மேம்படுத்தல் போன்றன இத்தலைமைத்துவ பயிற்சியின் நோக்கமாகும்.
இத்தலைமைத்துவ பயிற்சியானது எதிர்வரும் நவம்பர் மாதம் 20ம் திகதி தொடக்கம் நாடு பூராவும் இராணுவ மத்திய நிலையங்களில் நடைபெறுவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages