மட்டக்களப்பில் 108 கிராம சேவகர் வெற்றிடங்கள் - www.TRINCOINFO.com - Trincoinfo

புதிய தகவல்கள்

Post Top Ad

Post Top Ad

11/08/2017

மட்டக்களப்பில் 108 கிராம சேவகர் வெற்றிடங்கள் - www.TRINCOINFO.com


மட்டக்களப்பு மாவட்டத்தில் சுமார் 108 கிராம சேவை உத்தியோகத்தர் வெற்றிடங்கள் நிலவுகின்றன என்று ஐக்கிய கிராம உத்தியோகத்தர் சங்கத்தின் தலவைர் முருகபிள்ளை கோமலேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
கடந்த மூன்று வருடங்களாக குறித்த வெற்றிடங்கள் நிரப்பப்படாத நிலையில் மாவட்ட நிர்வாகம் இயங்கி வருவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் 343 கிராம சேவகர் பிரிவுகள் காணப்படுகின்றன. தற்போது 235 கிராம சேவகர்கள் மாத்திரம் பதவியில் உள்ளனர். வயது மற்றும் நியமனம் அடிப்படையில் ஒரே தொகுதியாக உள்வாங்கப்படுவதால் ஓய்வு பெறும் போதும் அனைவரும் ஓய்வு பெறுகின்றமை இவ்வாறு வெற்றிடங்கள் ஏற்படுவதற்கு காரணம். வருடா வருடம் நியமனம் வழங்கப்படுமாயின் இந்நிலை தோன்றாது என்று முருகுப்பிள்ளை கோமலேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages