1000 மொழி அலுவலர்களுக்கு ஜனவரியில் நியமனம் வழங்க முடிவு - Trincoinfo

புதிய தகவல்கள்

Post Top Ad

Post Top Ad

11/07/2017

1000 மொழி அலுவலர்களுக்கு ஜனவரியில் நியமனம் வழங்க முடிவு

அரச நிறுவனங்களில் தமிழ் மொழியைச் சீராக நடைமுறைப்படுத்துவதற்கு ஏதுவாக, மொழி அலுவலர்கள் ஆயிரம்பேரை நியமிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இது தொடர்பில் அடுத்த ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தில் முன்மொழியப்படவிருப்பதாக நம்பகரமாகத் தெரியவருகிறது.
தேசிய சகவாழ்வு, கலந்துரையாடல், அரச கரும மொழிகள் அமைச்சர் மனோ கணேசன் மேற்கொண்டுள்ள முயற்சியின் பலனாக இந்த நியமனம் வழங்கப்படவுள்ளது.
விண்ணப்பதாரிகள் கல்விப் பொதுத் தராதரப் பத்திர சாதாரண தரப் பரீட்சையில் தாய்மொழியில் திறமைச் சித்தி பெற்றிருப்பதுடன், ஆங்கிலம், கணிதம் ஆகிய பாடங்களில் சாதாரண சித்தியேனும் பெற்றிருக்க வேண்டும். அதேநேரம், உயர் தரத்தில் ஏதாவது ஒரு பாடத்தில் சித்தியடைந்திருக்க வேண்டும். இந்தத் தகைமைகளைப் பூர்த்தி செய்துள்ள ஆயிரம் பேருக்கு ஜனவரியில் நியமனம் வழங்கப்படவுள்ளது.ஆரம்பத்தில் ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்படும் இவர்களுக்குப் பயிற்சி வழங்கப்பட்டு ஆறு மாதகாலத்தின் பின்னர் நிரந்தரம் வழங்கப்படவுள்ளது.
தற்போது 21 அரச நிறுவனங்களுக்குச் சுமார் 3300 மொழி உத்தியோகத்தர்களுக்கான வெற்றிடம் இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது.
மொழி அமுலாக்கத்தைப் பொறுத்தவரை அதனை நான்கு கட்டங்களாக மேற்கொள்வதற்கு நடவடிக்ைக எடுக்கப்பட்டுள்ளது. சகல அறிவிப்புப் பலகைகளும் மும்மொழியிலும் பிழையற காட்சிப்படுத்த வேண்டும். எழுத்துருக்கள் சம அளவில் இருக்க வேண்டும். கருமங்களை நிறைவேற்றிக்ெகாள்வதற்கான சகல படிவங்களும் மும்மொழியிலும் அச்சிட்டு விநியோகிக்க வேண்டும்.
கருமங்களைத் தமது தாய் மொழியில் நிறைவேற்றிக்ெகாள்வதற்கு வசதி இருக்க வேண்டும். இதற்கமைய அடுத்த 2018ஆம் ஆண்டில் ஆயிரம் மொழி அலுவலர்களை நியமிப்பதெனவும் அதன் பின்னர் வெற்றிடத்தை முழுமையாக நிரப்ப நடவடிக்ைக எடுக்கப்படவிருப்பதாகவும் தெரியவருகிறது. இது தொடர்பில் அமைச்சர் மனோ கணேசனிடம் வினவியபோது அவர் இந்தத் தகவலை உறுதிப்படுத்தினார்.
- thinakaran -

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages