விஜய் ரசிகர்களே, இந்த செய்தியை படித்தால் அப்படியே மெர்சலாகிடுவீங்க - Trincoinfo

புதிய தகவல்கள்

Post Top Ad

Post Top Ad

Tuesday, October 17, 2017

விஜய் ரசிகர்களே, இந்த செய்தியை படித்தால் அப்படியே மெர்சலாகிடுவீங்க


மெர்சல் படத்தை அடுத்து அட்லீ யாரை வைத்து படம் எடுக்கப் போகிறார் என்பது தெரிய வந்துள்ளது. தெறி படத்தை அடுத்து விஜய், இயக்குனர் அட்லீ மீண்டும் சேர்ந்து பணியாற்றியுள்ள படம் மெர்சல். மெர்சல் படம் நாளை பிரமாண்டமாக ரிலீஸாகிறது. விஜய்க்கு கட்அவுட்டுகள் வைத்து மெர்சல் திருவிழாவை ரசிகர்கள் கொண்டாடுகிறார்கள்.

தெறி படத்தில் விஜய் மூன்று விதமான கெட்டப்புகளில் வந்திருந்தார். இந்நிலையில் மெர்சல் படத்தில் 3 கதாபாத்திரங்களில் வருகிறார். 3 என்பது வேண்டும் என்றே செய்தது இல்லை கதைக்கு தேவைப்பட்டதால் வைக்கப்பட்டது என்று அட்லீ பிரபல ஆங்கில நாளிதழுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

விஜய் எதையும் சட்டென்று கற்றுக் கொள்வார். மேஜிக் ட்ரிக்குகளை கற்றுக் கொள்ள பிற நடிகர்களுக்கு குறைந்தது 6 மாதங்களாகி இருக்கும். ஆனால் அவரோ 10-15 நிமிடத்தில் மேஜிக் செய்துவிட்டார் என்கிறார் அட்லீ.

மெர்சல் படத்தை அடுத்து மீண்டும் விஜய்யுடன் சேர்ந்து பணியாற்றக்கூடும் என்று அட்லீ தெரிவித்துள்ளார். இந்த மெர்சல் கூட்டணி மீண்டும் சேரப் போகிறது.

தெறி படத்தை அடுத்து விஜய்யை வைத்து தான் படம் எடுக்க வேண்டும் என்று காத்திருந்தார் அட்லீ. இந்நிலையில் மீண்டும் விஜய்யை இயக்க விருப்பம் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages