இந்திய அணியின் சிறந்த தலைவர் இவர் தான்: மனம் திறந்த அஸ்வின் - Trincoinfo

புதிய தகவல்கள்

Post Top Ad

Post Top Ad

Wednesday, October 18, 2017

இந்திய அணியின் சிறந்த தலைவர் இவர் தான்: மனம் திறந்த அஸ்வின்


இந்திய கிரிக்கெட் அணியின் சிறந்த தலைவர் யார் என்பது குறித்து சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் பேசியுள்ளார்.
இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் அணியில் இடம்பிடிக்க முடியாமல் திணறி வருகிறார்.
சமீபத்திய இலங்கை, அவுஸ்திரேலியா தொடர்களில் அஸ்வின் அணியில் சேர்க்கப்படாத நிலையில் வரவிருக்கும் நியூசிலாந்து தொடரிலும் புறக்கணிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட அஸ்வின் தனக்கு பிடித்த இந்திய அணித்தலைவர் யார் என பேசியுள்ளார்.
அவர் கூறுகையில், சவுரவ் கங்குலி தான் இந்தியாவின் சிறந்த தலைவர்.
இந்திய அணி மிகப்பெரிய தடுமாற்றத்தில் இருந்த போது தலைவராக பொறுப்பேற்ற அவர் இளம் வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கி தற்போதைய இந்திய அணிக்கான வெற்றிப்பாதையை உருவாக்கியவர் என கூறியுள்ளார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages