புதிய இலத்திரனியல் அடையாள அட்டைகள் இன்று முதல் விநியோகம் - Trincoinfo

புதிய தகவல்கள்

Post Top Ad

Post Top Ad

10/27/2017

புதிய இலத்திரனியல் அடையாள அட்டைகள் இன்று முதல் விநியோகம்


புதிய இலத்திரனியல் அடையாள அட்டைகள் இன்று முதல் விநியோகிக்கப்படவுள்ளதாக ஆட்பதிவு திணைக்களம் தெரிவித்துள்ளது.
ஸ்மார்ட் கார்ட் என இந்த புதிய அடையாள அட்டைக்கு பெயரிடப்பட்டுள்ளதாக ஆட்பதிவு திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் வியானி குணதிலக்க குறிப்பிட்டார்.
திருத்தப்படும் அடையாள அட்டை அல்லது புதிய அடையாள அட்டைகளைக் கோரியுள்ளோருக்கு இன்று முதல் ஸ்மார்ட் அட்டைகள் விநியோகிக்கப்படும் எனவும் அவர் கூறினார்.
அவற்றை ஒரு நாள் சேவையூடாக பெற்றுக்கொள்ள முடியும் எனவும் ஆட்பதிவு திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் தெரிவித்தார்.
1968 ஆம் ஆண்டு 32 ஆம் இலக்க ஆட்களை பதிவு செய்யும் சட்டமூலம் 1968 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 22 ஆம் திகதி நிறைவேற்றப்பட்டது.
அதன் பின்னர் ஸ்தாபிக்கப்பட்ட ஆட்பதிவு திணைக்களத்தின் ஊடாக 1972 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 14 ஆம் திகதி முதலாவதாக தேசிய அடையாள அட்டை விநியோகிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages