உலகின் மிக அருமையான மனிதர் ரஜினிகாந்த்! - அக்ஷய் குமார் புகழாரம் - Trincoinfo

புதிய தகவல்கள்

Post Top Ad

Post Top Ad

10/26/2017

உலகின் மிக அருமையான மனிதர் ரஜினிகாந்த்! - அக்ஷய் குமார் புகழாரம்


துபாய்: உலகின் மிக அருமையான மனிதர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். அவருடன் பணியாற்றியதை வாழ்நாளில் மறக்கமாட்டேன் என்று நடிகர் அக்ஷய் குமார் கூறினார். துபாயில் நடந்த 2.ஓ படத்தின் செய்தியாளர் சந்திப்பில் ரஜினிகாந்த் மற்றும் படக்குழுவினர் பங்கேற்றனர்.

ரஜினிகாந்துடன் நடித்த அனுபவம் குறித்து அக்ஷய்குமாரிடம் செய்தியாளர் கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த அக்ஷய்குமார், "உலகின் மிக அருமையான மனிதர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். அவருடன் பணியாற்றியதை வாழ்நாளில் மறக்கமாட்டேன். இந்த உயரத்தை அடைய அவர் உழைத்த உழைப்புதான் நமக்கெல்லாம் பாடம். அவரிடமிருந்து நிறைய கற்றுக் கொள்ள இன்னும் 5 படங்களாவது அவருடன் இணைந்து நடிக்க வேண்டும். இந்தப் படத்தில் எனது வேடம் மிக வித்தியாசமானது. நான் இதுவரை என் கேரியரில் செய்யாதது. இந்த வேடத்துக்காக தினமும் மூன்றரை மணி நேரம் மேக்கப் போட வேண்டியிருந்தது," என்றார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages