உத்தியோகத்தர்கள் பற்றாக்குறை: புராதன தொல்பொருள் சின்னங்களை பாதுகாப்பதில் சிக்கல் - Trincoinfo

புதிய தகவல்கள்

Post Top Ad

Post Top Ad

10/24/2017

உத்தியோகத்தர்கள் பற்றாக்குறை: புராதன தொல்பொருள் சின்னங்களை பாதுகாப்பதில் சிக்கல்

பாதுகாப்பு உத்தியோகத்தர்களது பற்றாக்குறை காரணமாக புராதன தொல்பொருள் சின்னங்களை பாதுகாப்பதில் பாரிய சிக்கல்கள் தோன்றியுள்ளதாக தொல்பொருள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
பாதுகாப்பு வழங்கப்பட வேண்டிய தொல்பொருள் சின்னங்கள் காணப்படும் 7500 இடங்கள் தற்போதுள்ளதாக திணைக்களத்தின் பணிப்பாளர் பேராசிரியர் பீ பீ மண்டாவல குறிப்பிட்டார்.
எனினும் அவற்றை பாதுகாக்க தொல்பொருள் திணைக்களத்தின் கீழ் 150 பாதுகாப்பு உத்தியோகத்தர்களே இருப்பதாக அவர் தெரிவித்தார்.
முறையான பாதுகாப்பை வழங்குவதற்கு 2271 உத்தியோகத்தர்கள் தேவைப்படுவதாக அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages