அட! சில்லுன்னு ஒரு காதல்ல வந்த பேபியா இது? மடமடன்னு வளந்துருச்சு!!! - Trincoinfo

புதிய தகவல்கள்

Post Top Ad

Post Top Ad

10/15/2017

அட! சில்லுன்னு ஒரு காதல்ல வந்த பேபியா இது? மடமடன்னு வளந்துருச்சு!!!இவரை அவ்வளவு சீக்கிரம் மறந்துவிட முடியுமா என்ன? சில்லுன்னு ஒரு காதலின் தாக்கத்தில் இன்னும் சிக்கிக் கொண்டிருக்கும் ரசிகர்கள் இவரை கண்டிப்பாக மறந்திருக்க மாட்டார்கள். சூர்யா - ஜோவின் முதல் மகள் இவர்தானே!   00:00 00:00 மிகக் கியூட்டான மகளாக தோன்றி அனைத்து தரப்பு ரசிகர்களையும் ஈர்த்த குழந்தை நட்சத்திரம் அல்லவா இவர். இப்போது மடமடவென வளர்ந்து நடிகையாகிவிட்டார். நிர்மலா கான்வென்ட் எனும் தெலுங்கு படத்தில் இவர் இப்போது நடித்து வருகிறார். ஆறு வயதிலேயே குடும்பங்களின் மனதை கொள்ளையடித்த ஷ்ரியா ஷர்மா இப்போது மூவாறு வயதில் இளைஞர் மனதை கொள்ளையடிக்க மீண்டும் வந்துள்ளார்...

ஷ்ரியா ஷர்மா ஹிமாச்சல் பிரதேசத்தில் உள்ள பாலம்பூர் எனும் ஊரில் பிறந்தவர். சிறுவயது முதல் மாடலிங் மற்றும் விளம்பரங்களில் தோன்றி நடித்து வருகிறார். ஷ்ரியா ஷர்மா இவரது மூன்று வயதில் இருந்தே நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஷ்ரியா ஷர்மாவின் தந்தை விக்காஸ் ஒரு பொறியியலாளர். இவரது அம்மா ரீத்து ஷர்மா டயட்டிஷியானாக இருந்து வருகிறார். பெற்றோரின் ஊக்கம், மற்றும் தனது திறமையால் ஷ்ரியா ஷர்மா 15 வருடங்களால் விளமபரம் மற்றும் திரைத்துறையில் பணியாற்றி வருகிறார்.

ஆரம்பத்தில் ஷ்ரியா ஷர்மா விளம்பரங்களில் தான் தோன்றினார், சன் ஃபீஸ்ட், வேர்ல்பூல், லக்ஸ், ரெலாக்ஸோ, செல்லோ பென், டெல், காம்ப்ளேன், ரஸ்னா என 30-40 விளம்பரங்களில் ஷ்ரியா ஷர்மா நடித்துள்ளார்.

2011-ம் ஆண்டு வெளிவந்த "சில்லர் பார்டி" எனும் இந்தி திரைப்படத்திற்காக ஷ்ரியா ஷர்மா தேசிய விருதும் வென்றுள்ளார்.

ஸ்டார் பரிவார் விருது 2004 - சிறந்து குழந்தை நட்சத்திரம் விருது

இந்தியன் டெலி விருது 2004 - சிறந்த பெண் குழந்தை கலைஞர்

இந்தியன் டெலிவிஷன் அகாடமி விருது 2004 - சிறந்த குழந்தை நட்சத்திரம்

ஷ்ரியா ஷர்மா இரண்டு பஞ்சாபி இசை வீடியோக்கள் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இயக்குனர் கான்டிஸ் பிரியட்ஸ் (Candice BREITZ) இயக்கிய ஜெர்மன் ப்ராடிஜியில் ஏனைய ஐந்து இந்திய குழந்தை நடசத்திரங்கள், ஆறு ஹாலிவுட், மற்றும் நைஜீரியன் குழந்தை நட்சத்திரங்களோடு இனைந்து தோன்றினார்.


No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages