சந்திரனில் மிகப்பெரிய குகை கண்டுபிடிப்பு - Trincoinfo

புதிய தகவல்கள்

Post Top Ad

Post Top Ad

Friday, October 20, 2017

சந்திரனில் மிகப்பெரிய குகை கண்டுபிடிப்பு


ஜப்பானின் ‘செலீன்’ விண்கலம் சந்திரனில் ஆய்வு நடத்தி வருகிறது.
அந்த விண்கலம் அனுப்பிய புகைப்படங்கள் மூலம் சந்திரனில் மிகப்பெரிய குகை இருப்பதை ஜப்பான் விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
சந்திரனுக்கு முதன்முதலாக அமெரிக்கா மனிதர்களை அனுப்பி சரித்திர சாதனை படைத்தது. அதைத்தொடர்ந்து இந்தியா, சீனா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகள் சந்திரனில் ஆய்வுகளை மேற்கொண்டன.
அந்த வகையில், தற்போது ஜப்பானின் ‘செலீன்’ விண்கலம் சந்திரனில் ஆய்வு நடத்தி வருகிறது.
செலீன் அனுப்பிய புகைப்படத்தில் உள்ள குகை 50 கிலோமீட்டர், 131 மைல் நீளமும் 100 மீட்டர் அகலமும் கொண்டது.
இது சந்திரனில் உள்ள ‘மாரியஸ்’ என்ற எரிமலையில் உள்ளது.
மாரியஸ் வெடித்ததில் வெளியேறி ஓடிய எரிமலைக்குழம்பு சென்ற வழி குழாய் போன்ற அமைப்பில் உள்ளதுடன், அதுவே மிகப்பெரிய குகையாக மாறியுள்ளது.
இந்த குகை 350 கோடி ஆண்டுகளுக்கு முன்பு உருவாகி இருக்கலாம் என விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.
இந்த குகையில் சந்திரனுக்கு செல்லும் விண்வெளி வீரர்கள் தங்க முடியும். அதன் மூலம் சந்திரனைத் தாக்கும் அதிகளவு தட்பவெப்ப நிலை மற்றும் கதிர் வீச்சில் இருந்து அவர்கள் தங்களை பாதுகாத்துக் கொள்ளலாம்.
இத்தகவல் அமெரிக்க அறிவியல் இதழ் ஒன்றில் வௌியாகியுள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages