அர்ப்பணிப்பு உள்ளவர் அப்பா.. அரசியலுக்கு வந்தால் ஆதரவு.. ஸ்ருதிஹாசன் பளீச்! - Trincoinfo

புதிய தகவல்கள்

Post Top Ad

Post Top Ad

Friday, October 13, 2017

அர்ப்பணிப்பு உள்ளவர் அப்பா.. அரசியலுக்கு வந்தால் ஆதரவு.. ஸ்ருதிஹாசன் பளீச்!எதிலும் அர்ப்பணிப்புடன் செயல்படும் கமல்ஹாசன் அரசியலுக்கு வந்தால் அவருக்கு முழு ஆதரவு உண்டு என்று நடிகை ஸ்ருதிஹாசன் கூறியுள்ளார். சென்னை அண்ணாநகரில் தனியார் ஜவுளிக்கடை ஒன்றை நடிகை ஸ்ருதிஹாசன் திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சிக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் ஸ்ருதிஹாசன் பேசியதாவது : என்னுடைய ஆதரவு எப்போதும் என்னுடைய அப்பாவிற்கு உண்டு. இது மட்டுமல்ல அவர் எது செய்தாலும் அவருக்கு ஆதரவு அளிப்பேன்.

நான் அவரை மிகவும் மதிக்கிறேன். அவர் எந்த முடிவை எடுத்தாலும் அதில் தீர்க்கமாக இருப்பார். முழு அர்ப்பணிப்புடன் எந்த செயலிலும் ஈடுபடக் கூடியவர். எனக்கு அரசியல் பற்றி அவ்வளவாக தெரியாது, அதனால் நான் அதைப் பற்றி பேச முடியாது. ஆனால் என்னுடைய அப்பா அரசியலுக்கு வந்தால் அவருக்கு நிச்சயம் ஆதரவு அளிப்பேன் என்று தெரிவித்தார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages