உலகின் பலமிக்க கடவுச்சீட்டு! முதலிடத்தில் சிங்கப்பூர்! இலங்கைக்கு பின்னடைவு - Trincoinfo

புதிய தகவல்கள்

Post Top Ad

Post Top Ad

Wednesday, October 25, 2017

உலகின் பலமிக்க கடவுச்சீட்டு! முதலிடத்தில் சிங்கப்பூர்! இலங்கைக்கு பின்னடைவு2017ஆம் ஆண்டுக்கான பலமிக்க கடவுச்சீட்டு சுட்டெண்ணில் இலங்கையின் கடவுச்சீட்டுக்கு 89வது இடம் கிடைத்துள்ளது.
முதன்முறையாக உலகின் பலமிக்க கடவுசீட்டுகளில், சிங்கப்பூர் கடவுச்சீட்டுக்கு முதல் இடம் கிடைத்துள்ளது. சிங்கப்பூருக்கான விசா விதிமுறைகளை பரகுவே நீக்கியுள்ள நிலையில் சிங்கப்பூருக்கு முதலிடம் கிடைத்துள்ளது.
அதனையடுத்து, முதலிடத்தில் இருந்த ஜேர்மன் நாட்டை பின்தள்ளி சிங்கப்பூர் முதலிடத்தை பிடித்துள்ளது.
உலகின் பலமிக்க கடவுச்சீட்டு பட்டியலில் பொதுவாக ஐரோப்பிய நாடுகளே முன்னணி வகிப்பதுண்டு. கடந்த இரண்டு ஆண்டுகளாக, ஜேர்மனி முதலிடம் வகித்து வந்தது
Arton Capital நிறுவனம் வெளியிட்ட புதிய தர வரிசையில் சிங்கப்பூருக்கு 159 புள்ளிகள் கிடைத்து முதலிடம் பிடித்துள்ளது. 158 புள்ளிகள் பெற்று ஜேர்மன் இரண்டாவது இடத்தையும், 157 புள்ளிகள் பெற்று சுவீடன் மற்றும் தென் கொரியா மூன்றாம் இடத்தையும் பெற்றுள்ளது.
அதற்கமைய டென்மார்க், பின்லாந்து, இத்தாலி, பிரான்ஸ், ஸ்பெயின், நோர்வே, ஜப்பான் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் 156 புள்ளிகளை பெற்று 4ஆம் இடத்தை பிடித்துள்ளது.
இதேவேளை, இலங்கை 36 புள்ளிகளை பெற்று 89வது இடத்தை பிடித்துள்ளது. இதற்கு முன்னர் வெளியிடப்பட்ட தரவரிசையில் இலங்கைக்கு 85வது இடம் கிடைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages