யாரும் காசு தருவதில்லை... அதனால் நிஜ வாழ்க்கையில் நடிப்பதில்லை! - ரஜினிகாந்த் - Trincoinfo

புதிய தகவல்கள்

Post Top Ad

Post Top Ad

10/26/2017

யாரும் காசு தருவதில்லை... அதனால் நிஜ வாழ்க்கையில் நடிப்பதில்லை! - ரஜினிகாந்த்


சென்னை: நிஜ வாழ்க்கையில் தாம் ஒருபோதும் நடிப்பதில்லை என்று நடிகர் ரஜினிகாந்த் கூறியுள்ளார்.
2.ஓ படத்தின் சர்வதேச செய்தியாளர் சந்திப்பு துபாயில் இன்று நடந்தது. இதில் ரஜினிகாந்த், ஷங்கர், ஏஆர் ரஹ்மான், அக்ஷய் குமார், லைகா சுபாஷ்கரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்த செய்தியாளர் சந்திப்பில் ரஜினி ஒரே ஒரு கேள்விக்கு மட்டும் பதிலளித்தார். மற்ற கேள்விகளுக்கு ஷங்கர், அக்ஷய் குமார், எமி ஜாக்ஸன் ஆகியோர் பதிலளித்தனர். ரஹ்மானும் ஒரு கேள்விக்கு மட்டுமே பதிலளித்தார்.
ஒரு மணி நேரத்துக்கும் குறைவாக மட்டுமே நடந்த இந்த செய்தியாளர் சந்திப்பில் ரஜினியிடம் ஒரு செய்தியாளர் கேள்வி கேட்டார். பொதுவாழ்க்கையில் இவ்வளவு எளிமையாக இருக்கிறீர்களே? என்றார்.
அதற்கு நகைச்சுவையாக பதிலளித்த ரஜினி, "நிஜ வாழ்க்கையில் நடிக்க யாரும் காசு தருவதில்லை. அதனால் எளிமையாக இருக்கிறேன்," என்றார் தனக்கே உரிய சிரிப்புடன். இந்த பதிலுக்கு அனைவரும் கைதட்டிப் பாராட்டினர்.
ரஜினியிடம் அடிக்கடி கேட்கப்படும் கேள்வி இது. எனவே இந்த முறை ஒரு மாறுதலுக்கு நகைச்சுவையாக பதிலளித்துள்ளார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages