Latest News

கேரளாவுக்கு நாம் ஏன் போக வேண்டும் ?


கேரளா, ஒருமுறை சென்றால் மீண்டும் மீண்டும் செல்ல தூண்டும் அற்புதமான இடங்களையுடைய மாநிலம். காணுமிடமெல்லாம் பாய்ந்தோடும் ஓடைகள், புன்னகை அணிந்த பேரழகுடைய பெண்டிர், குளுமையும், பசுமையும் சேர்ந்து நர்த்தனமாட கேரளத்தின் இயற்கை அழகில் சொக்கிப்போவதை நம்மால் தவிர்க்கவே முடியாது. அது மட்டும் இல்லாமல் பிரசித்திவாய்ந்த இந்து கோயில்கள், மேர்சலாக்கும் கடற்கரைகள், நாவை கட்டிப்போடும் அதி சுவையான உணவுகள் என கேரளத்தின் சிறப்புகளை சொல்லிக்கொண்டே போகலாம். சரி, வாருங்கள் நாம் ஏன் கேரளாவுக்கு சுற்றுலா செல்ல வேண்டும் என்று தெரிந்து கொள்வோம்.
என்னதான் நவீன மருத்துவம் விஞ்யான வளர்ச்சியின் துணையுடன் மிகப்பெரிய அளவில் வளர்ச்சி அடைந்து விட்டாலும் முற்றிலும் இயற்கையின் துணைகொண்டு உருவாக்கப்பட்ட ஆயுர்வேதத்தின் மகத்துவத்திற்கு இணையாக முடியாது. அப்படிப்பட்ட ஆயுர்வேத மருத்துவ முறைகள் இன்றும் வெகுவாக கேரளாவில் பயன்பாட்டில் இருக்கின்றன.
கேரளாவில் உள்ள குமரகம், கோட்டைக்கல், திரிச்சூர் போன்ற இடங்களில் ஆயுர்வேத சிகிச்சை அளிக்கும் மையங்கள் நிறைய இருக்கின்றன. இவை மருத்துவமனை போல இல்லாமல் அமைதியான சூழலில் சுற்றுலா விடுதிகள் போல அமைந்திருப்பதால் உடலுக்கு மட்டும் இல்லாமல் மனதுக்கும் இதம் அளிக்கும் இடமாக ஆயுவேத சிகிச்சை மையங்கள் இருக்கின்றன.
கேரளாவில் இருக்கும் மிகப்பெரியாக ஏரியாக திகழ்கிறது வேம்பநாடு ஏரி. ஆலப்புழா, எர்ணாகுளம், கோட்டயம் உள்ளிட்ட மாவட்டங்களில் ஊடாக இந்த வேம்பநாடு ஏரி பாய்கிறது. கேரளத்தின் முக்கிய சுற்றுலா சார்ந்த நிகழ்வுகள் இந்த ஏரியில் தான் நடைபெறுகின்றன.
ஓணம் பண்டிகையை ஒட்டி ஆகஸ்ட் மாதத்தில் 'வல்லம் கழி' என்னும் படகு போட்டி நடத்தப்படுகிறது. ஆலப்புழாவில் இதே வேம்பநாடு ஏரி 'புன்னமடா ஏரி' என அழைக்கப்படுகிறது. அந்த ஏரியில் நடக்கும் படகு போட்டியை காண ஆயிரக்கணக்கான சுற்றுலாப்பயணிகள் இங்கு குவிகின்றனர்.
 
இந்த படகு போட்டியின் முக்கிய நிகழ்வாக கருதப்படுவது 'சுடன் வல்லம்' எனப்படும் பாம்பு படகு போட்டி தான். நீண்ட படகில் நூற்றுக்கணக்கான வீரர்கள் ஒரே நேரத்தில் ஆசகாயமாக துடுப்பு போட்டபடி செல்லவது பார்க்க கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும்.

கோவாவில் இருக்கும் கடற்கரைகளுக்கு இணையான அழகுடன் சுற்றுலாப்பயணிகளை கவர்ந்ந்திருக்கிறது கேரள தலைநகரான திருவனந்தபுறத்திற்கு அருகில் இருக்கும் வர்களா பீச்.

இந்த கடற்கரையின் சிறப்பம்சம் என்னவென்றால் தென் இந்தியாவிலேயே மலை குன்றை ஒட்டி அமைந்திருக்கும் ஒரே கடற்கரை இதுவாகும். இங்கு அமைந்திருக்கும் குன்றின் மேல் ஏராளமான தாங்கும் விடுதிகளும், 'ஸ்பா'க்களும் நிறைய உள்ளன. சூரியக்குளியல் போடவும், கடலில் நீச்சலடிக்கவும் சிறந்த இடமாகும் இந்த வர்களா பீச்.

அருமையான கடற்கரைகளை போலவே மனம் மயக்கும் மலைவாசஸ் ஸ்தலங்களும் கேரளத்தில் உள்ளன. அப்படியொரு இடம் தான் தமிழக - கேரளா எல்லையை ஒட்டி அமைந்திருக்கும் மூணார் நகரமாகும். இந்தியாவில் தேனிலவு செல்ல சிறந்த 10 இடங்களுள் ஒன்றாக மூணார் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறது.

மூணாரில் பச்சை போர்வை போர்த்தியது போன்ற தேயிலை தோட்டங்கள், அரிய விலங்கினங்கள் வசிக்கும் தேசிய பூங்காக்கள்,மாட்டுபெட்டி அணைக்கட்டு, சூசைட் பாயிண்ட் என சுற்றிப்பார்க்க நல்ல இடங்கள் இங்கே உண்டு. காதல் மனைவியுடன் எங்கேனும் தனிமையில் சுற்றுலா வர ஆசைப்படுபவர்கள் நிச்சயம் மூணாருக்கு வர வேண்டும்.

தென்னையில் இருந்து கிடைக்கும் அற்புதமான பானம் 'கள்' ஆகும். மருத்துவ குணம் நிறைந்த இந்த கல் தமிழ் நாட்டில் தடை செய்யப்படிருந்தாலும் கேரளாவில் சர்வ சாதாரணமாக இது கிடைக்கிறது. நம்ம ஊர் 'பார்' களைப்போல அசுத்தமாக இல்லாமல் மிக நேர்த்தியாக கள் அருந்தும் இடங்கள் பராமரிக்கப்படுகின்றன.

கேரளத்தில் இருக்கும் மற்றுமொரு மிகச்சிறந்த சுற்றுலா அம்சம் ஆலப்புழா படகு வீடுகள் ஆகும். ஆலப்புழாவில் அலைகள் எழாத உப்பங்கழி நீரோடைகள் அமைந்திருப்பதால் அவற்றில் படகுகள் எந்தவித சிரமமும் இன்றி செல்ல முடியும். இதனை பயன்படுத்தி படகுகளே சுற்றுலா தாங்கும் விடுதிகள் போல் மாற்றப்பட்டு தேனிலவை கொண்டாடவும், விடுமுறையை களித்திடவும் சிறந்த இடமாக ஆலப்புழாவை மாற்றியிருக்கிறது.

வேறு எதற்காக இல்லா விட்டாலும் கிடைக்கும் அதிசுவையான உணவுகளுக்காகவே கேரளாவிற்கு சுற்றுலா செல்லலாம். ஆலப்புழாவில் கிடைக்கும் சுவையான கரி மீன், கொச்சியில் கிடைக்கும் தேங்காய் எண்ணெயில் பொறிக்கப்பட்ட எறால் மீன், தலசேரி பிரியாணி போன்ற உணவுகள் ஒருமுறை சாப்பிட்டால் அதன் சுவைக்கு நம்மை அடிமைப்படுத்தி விடும்.
  • Blogger Comments
  • Facebook Comments

0 comments:

Post a Comment

Item Reviewed: கேரளாவுக்கு நாம் ஏன் போக வேண்டும் ? Description: Rating: 5 Reviewed By: ST
Scroll to Top