திருமலை துறைமுகத்தை எந்தவொரு நாட்டுக்கும் தாரை வார்க்க முடியாது - Trincoinfo

புதிய தகவல்கள்

Post Top Ad

Post Top Ad

10/30/2017

திருமலை துறைமுகத்தை எந்தவொரு நாட்டுக்கும் தாரை வார்க்க முடியாதுதிருகோணமலை இயற்கைத் துறைமுகத்தை இந்தியாவுக்கோ? வேறெந்த நாடுகளுக்கோ அரசாங்கம் தாரைவார்க்க முற்படவில்லை எனத் தெரிவித்த பிரதமர்,எந்த நாடாக இருந்தாலும் திருமலை துறைமுகத்தை தமது வர்த்தக நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்திக்கொள்ள முன்வந்தால் அது குறித்து சாதகமாக பரிசீலிக்க முடியும் எனவும் குறிப்பிட்டார்.
ஐக்கிய தேசியக் கட்சித் தலைமையகமான ஸ்ரீகொத்தாவில் நேற்று(30) திங்கட்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டின் போது கேட்கப்பட்ட கேள்வியொன்றுக்குப் பதிலளிக்கையிலேயே பிரதமர் இவ்வாரறு தெரிவித்தார்.இங்கு மேலும் பேசிய அவர்: இந்தியா வங்காள விரிகுடா வுக்குள் அமைந்துள்ள ஒரு நாடாகும்.
அந் நாடு வர்த்தக நடவடிக்கைகளுக்காக திருகோணமலை இயற்கைத் துறைமுகத்தை பயன்படுத்திக்கொள்ள விரும்பி அனுமதி கோரியுள்ளது. அதன் மூலம் இலங்கைக்கு சாதகமான நன்மைகளைப் பெற்றுக்கொள்ள முடியும் என்பதால் அதற்கான அனுமதியை வழங்க தீர்மானிக்கப்பட்டது.
இதேபோன்று ஜப்பானும் தனது விருப்பத்தைகோரியுள்ளது. இது குறித்து கவனம் செலுத்தப்பட்டு வருகின்றது. சிங்கப்பூர் மற்றும் எந்தவொரு நாடாக இருப்பினும் வங்காள விரிகுடாவை வர்த்தக நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்திக்கொள்ள திருமலை இயற்கைத் துறைமுகத்தை கேந்திரமாகப் பயன்படுத்த விண்ணப்பித்தால் அது குறித்து சாதகமாக ஆராய முடியும். அப்படிச் செயற்படுவதை எமது இயற்கைத் துறைமுகத்தை மற்றொரு நாட்டுக்கு தாரைவார்ப்பதாக கருத முடியாது.
எமது நாட்டின் எந்தவொரு வளத்தையும் நாம் எவருக்கும் தாரைவார்க்கப் போவதில்லை. சிலர் மக்களை தவறாக வழிநடத்த முற்படுகின்றனர். கடந்த ஆட்சியின் போது எமது வளங்கள் விற்கப்பட்டது போன்று அரசாங்கம் செய்ய முற்படமாட்டாது என்பதை உறுதியாகத் தெரிவித்துக் கொள்கின்றேன் என்றார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages