728x90 AdSpace

Latest News

திருகோணமலையில் வெற்றிகரமாக நிறைவுபெற்ற கடற்படை பயிற்சி

இலங்கை கடற்படை மற்றும் அமெரிக்க பசிபிக் கடற்படை ஆகியனவற்றின் 2017ஆம் ஆண்டுக்கான 23 ஆவது கடற்படைசார் தயார்நிலைக்கான ஒத்துழைப்பு மற்றும் பயிற்சி நடவடிக்கை நிறைபெற்றது.
திருகோணமலையில் நேற்று நிறைவடைந்த இப் பயிற்சி திட்டத்தில் கலந்துகொண்;ட புதிய நாடாக இலங்கை கூறப்படுகிறது.

இதன் பிரகாரம் குறித்த பயிற்சி நடவடிக்கைகள் கடந்த 02 ஆம் திகதி முதல் 06ஆம் திகதி வரை தொடந்து 05 நாட்கள் இடம்பெற்றது.

கடல்சார் பாதுகாப்பை மேம்படுத்தி இடைநிலைத்தன்மை மேற்கொள்வதன் மூலம் இப்பயிற்சியில் பங்குகொள்ளும் பிராந்திய நாடுகளுக்கிடையிலான கடற்படைகளுடன் நெருக்கமாக பணியாற்ற இதன்மூலம் வழிவகுக்கும்.

1995ஆம் ஆண்டு ஆரம்பித்து வைக்கப்பட்ட CARAT எனும் குறித்த பயிற்சி நடவடிக்கையின் ஊடாக, தென் மற்றும் தென்கிழக்கு ஆசியா நாடுகளுக்கிடையே கடல்வழி பாதுகாப்பு முன்னுரிமைகளை பகிர்ந்து கொள்ளல், பயிற்சி நடவடிக்கையில் பங்கேற்கும் படையினருக்கிடையே இயங்குதன்மையை மேம்படுத்தல், கடற்படை கூட்டணியை நிலைத்திருக்கும் வகையில் அபிவிருத்தி செய்தல் என்பன இதன் பிரதான நோக்கமாக காணப்படுகிறது.

மேலும், வலுவான உறவுகளை உருவாக்குவதன் ஊடாக தயார் நிலையை அதிகரித்து நம்பிக்கையை கட்டியெழுப்புதல் மூலம் பல வருடங்கள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டுவரும் இப் பயிற்சி கடல், நிலம், ஆகாயம் ஆகியவற்றில் பல பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறமை குறிப்பிடத்தக்கது.










  • Blogger Comments
  • Facebook Comments

0 comments:

Post a Comment

Item Reviewed: திருகோணமலையில் வெற்றிகரமாக நிறைவுபெற்ற கடற்படை பயிற்சி Description: Rating: 5 Reviewed By: ST
Scroll to Top