கிழக்கில் சித்தியடைந்த அனைவருக்கு நியமனம் கிடைக்குமா? - Trincoinfo

புதிய தகவல்கள்

Post Top Ad

Post Top Ad

Friday, October 27, 2017

கிழக்கில் சித்தியடைந்த அனைவருக்கு நியமனம் கிடைக்குமா?


கிழக்கு மாகாணத்தில் அண்மையில் நடத்தப்பட்ட ஆசிரியர் போட்டிப்பரீட்சையில் 2868 பேர் சித்தியடைந்துள்ளனர். எனினும் மாகாணத்தில் 1440 வெற்றிடங்கள் உள்ளதாக அடையாளங்காணப்பட்டுள்ள நிலையில் சித்தியடைந்த அனைவருக்கும் நியமனங்கள் கிடைக்குமா என்ற கேள்வி எழும்பியுள்ளது.
அம்பாறை மாவட்டத்தில் பரீட்சை எழுதிய 3009 பேரில் 1296 பேரும் திருகோணமலை மாவட்டத்தில் பரீட்சை எழுதிய 1521 பேரில் 576 பேரும் மட்டக்களப்பு மாவட்டத்தில் பரீட்சை எழுதிய 2350 பேரில் 576 பேருமாக 2868 பேர் சித்தியடைந்துள்ளன.
சித்தியடைந்துள்ள அனைவரும் இரண்டு பாடங்களுக்கும் 40 இற்கும் அதிகமாக புள்ளிகளை பெற்றுள்ளனர் என்றும் தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, கிழக்கு ஆளுநர் அண்மையில் கருத்து வௌியிடுகையில் 1500 ஆசிரியர் நியமனங்களை வழங்குவதற்கான தரவுகள் சேகரிக்கவுள்ளதாக தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages