சக வீரருடன் நேருக்கு நேர் மோதி விபத்து: கால்பந்து போட்டியின்போது உயிரிழந்த வீரர் - Trincoinfo

புதிய தகவல்கள்

Post Top Ad

Post Top Ad

Sunday, October 15, 2017

சக வீரருடன் நேருக்கு நேர் மோதி விபத்து: கால்பந்து போட்டியின்போது உயிரிழந்த வீரர்

இந்தோனேசியாவில் நடந்த கால்பந்து போட்டியின்போது சக வீரருடன் நேருக்கு நேர் மோதிய விபத்தில் கழுத்து மற்றும் தலையில் பலத்த காயமடைந்த வீரர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தோனேசியாவின் Choirul Huda(38) என்ற கால்பந்து கோல்கீப்பர் தான் குறித்த விபத்தில் உயிரிழந்த வீரர்.
இன்று நடைபெற்ற இந்தோனேசிய சூப்பர் லீக் போட்டியில் Persela மற்ரும் Semen Padang ஆகிய அணிகள் மோதின. இதில் ஹுடா பந்தை பெற்றுக்கொள்ளும் பொருட்டு முன்னோக்கி வேகமாக வந்துள்ளார்.
அப்போது எதிர்பாராத விதமாக தமது அணியில் உள்ள இன்னொரு வீரருடன் மோதியுள்ளார். இதில் ஹுடாவின் தலை மற்றும் கழுத்தில் பலத்த காயமேற்பட்டுள்ளது.
மோதல் காரணமாக நிலைகுலைந்து சரிந்துள்ள ஹுடாவை உடனடியாக மீட்டு மருத்துவமனைக்கு விரைந்துள்ளனர்.
ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் மருத்துவமனையிலேயே உயிரிழந்ததாக தெரிய வந்துள்ளது.
குறித்த சம்பவம் இந்தோனேசிய கால்பந்து ரசிகர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages