யாழில் சென்ற வாகனத்தை இடைநிறுத்திய ஜனாதிபதி மைத்திரி! - Trincoinfo

புதிய தகவல்கள்

Post Top Ad

Post Top Ad

Sunday, October 15, 2017

யாழில் சென்ற வாகனத்தை இடைநிறுத்திய ஜனாதிபதி மைத்திரி!ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன யாழிற்கு விஜயம் செய்துள்ள நிலையில் யாழ். இந்துக்கல்லூரிக்கு முன்பாக பாரிய ஆர்ப்பாட்டமொன்று நடத்தப்படுகிறது.
இந்த நிலையில் தான் சென்ற வழியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆர்ப்பாட்டகாரர்களின் கோஷத்தை செவிமடுத்த ஜனாதிபதி தான் சென்ற வாகனத்தை இடைவழியில் நிறுத்தி இறங்கியுள்ளார்.
பாதுகாவலர்களையும் மீறி தனது வாகனத்திலிருந்து இறங்கிய மைத்திரிபால சிறிசேன போராட்டத்தில் ஈடுபட்டவர்களை சந்தித்துள்ளார்.
இதன்போது ஆர்ப்பாட்டகாரர்கள் அரசியல் கைதிகளை விடுதலை செய்யுமாறு உரத்து கோஷம் எழுப்பியுள்ளதுடன், வட மாகாணசபை உறுப்பினர் சிவாஜிலிங்கம் உள்ளிட்ட சிலர் ஜனாதிபதியுடன் உரையாடியுள்ளனர்.
அந்த கலந்துரையாடலின் போது,
அரசியல் கைதிகளின் விடுதலை செய்யுமாறும், வவுனியா நீதிமன்றில் வழக்குகளை நடாத்துமாறு உண்ணாவிரதம் இருக்கும் அரசியல் கைதிகளின் வழக்குகளை வேறு நீதிமன்றத்திற்கு மாற்ற வேண்டாமென்றும் கோரிக்கை முன்வைத்தனர்.
அவர்களின் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட ஜனாதிபதி தான் உரிய நடவடிக்கை மேற்கொள்வதாகவும் தெரிவித்ததாக வடமாகாண சபை உறுப்பினர் கே.சிவாஜிலிங்கம் ஊடகங்களுக்கு தெரிவித்தார்.
இவ்வாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வீதியின் இடையில் தனது வாகனத்திலிருந்து இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் உரையாடிய சம்பவமானது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages