கையடக்கத் தொலைபேசியை தாக்கும் வைரஸ் தொடர்பில் வெளியான தகவல் - Trincoinfo

புதிய தகவல்கள்

Post Top Ad

Post Top Ad

10/18/2017

கையடக்கத் தொலைபேசியை தாக்கும் வைரஸ் தொடர்பில் வெளியான தகவல்


கையடக்கத் தொலைபேசிகளை தாக்கக்கூடிய புதிய வைரஸ் (ரென்ஸம் வேயார்) ஒன்று தற்போது வேகமாக பரவி வருவதாக இலங்கை கணிணி அவசர பிரிவு தெரிவித்துள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் சர்வதேச ரீதியில் முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக இலங்கை கணிணி அவசர பிரிவின் பிரதம பொறியியலாளர் ரொஷான் சந்திரகுப்த தெரிவித்துள்ளார்.
கையடக்கத் தொலைபேசியின் ஊடாக இணையத்தளத்திற்கு பிரவேசிக்கும் போது, பிளேஸ் பிளேயர் புதுப்பிப்பதற்கான கோரிக்கையொன்று விடுக்கப்படுவதாக கூறிய அவர், அதனை புதுப்பிக்க முயற்சிக்கும் பட்சத்தில் கையடக்கத் தொலைபேசிக்குள் வைரஸ் தாக்கப்படுவதாகவும் குறிப்பிட்டார்.
இந்த வைரஸ் தாக்கத்தின் ஊடாக கையடக்கத் தொலைபேசியிலுள்ள தரவுகள் முடக்கப்படுவதாகவும், அதனை மீளப் பெற்றுக் கொள்வதற்கு நிதி செலுத்த வேண்டியுள்ளதாகவும் ரொஷான் சந்திரகுப்த மேலும் கூறினார்.
கையடக்கத் தொலைபேசியின் மென்பொருள் மற்றும் பாதுகாப்பு மென்பொருள் ஆகியன புதுப்பிக்கப்படுவதன் ஊடாக இவ்வாறான வைரஸ் தாக்கத்திலிருந்து பாதுகாத்துக் கொள்ளமுடியும் என அவர் கோரிக்கை விடுக்கின்றார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages