அமெரிக்க பல்வகை வீசா லொத்தர் மீளவும் ஆரம்பம். கொழும்பிலுள்ள அமெரிக்க தூதரகம் அறிவிப்பு - Trincoinfo

புதிய தகவல்கள்

Post Top Ad

Post Top Ad

Tuesday, October 17, 2017

அமெரிக்க பல்வகை வீசா லொத்தர் மீளவும் ஆரம்பம். கொழும்பிலுள்ள அமெரிக்க தூதரகம் அறிவிப்பு


அமெரிக்க பல்வகை வீசா லொத்தர் மீளவும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகத்தின் பொது விவகாரப் பிரிவு இன்று செவ்வாய்க்கிழமை அறிவித்துள்ளது.
தொழிநுட்ப இடர்பாடுகளால் தடைப்பட்ட குறித்த சேவை, மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்கத் தூதரகம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “தொழிநுட்ப இடர்பாடுகளால் 2019ஆம் ஆண்டிற்கான பல்வகைப்பட்ட வீசா DV2019 விண்ணப்பக் காலம் மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
சில தொழிநுட்ப இடர்பாடுகளின் காரணங்களினால் இவ்விடயம் சரியான முறையில் கையாளப்படவில்லை. எனவே மீளவும் கணினிப் பதிவுகள் புதிதாக ஆரம்பிக்கப்படவுள்ளது.
எவ்வித வெளிப்புறக் குறுக்கீடுகளினாலோ அல்லது இணைய ஊடுருவல் முயற்சிகளினாலோ இது மீள ஆரம்பிக்கப்படவில்லை.
கிறீன் கார்ட் விண்ணப்பதாரிகளுக்கு ஏற்படுத்தப்பட்டுள்ள சிரமத்திற்கு நாம் வருந்துகின்றோம். விண்ணப்பப்படிவங்கள் நேர்மையான முறையில் கையாளப்படுவதற்கு DV2019 திட்டம் மீள ஆரம்பிக்கப்படுவதே சரியான முறையாகும்.
விண்ணப்பதாரிகள் ஒரேயொரு நுழைவுப் படிவத்தை நிரப்ப வேண்டும். விண்ணப்பதாரர்கள் பதிவு செய்யும் காலத்தின்போது Dvlottery.state நுழைவுப் படிவங்களைப் பதிவு செய்யலாம்.
இந்நிகழ்ச்சி பற்றிய அறிவுறுத்தல்களை ஐக்கிய அமெரிக்க ராஜாங்கத் திணைக்களத்தின் இணையத் தளத்தில் பெற்றுக் கொள்ளலாம். ஏனைய usvisas.state.gov ஏனைய அனைத்து தகுதி தேவைகளில் எவ்வித மாற்றங்களும் இல்லை.
2018 மே 15, தொடங்கி DV2019 விண்ணப்பதாரிகள் தங்கள் நுழைவுப் படிவம் தேர்வு செய்யப்பட்டுள்ளதா என்பதைப் பார்க்க கிறீன் கார்ட் வீசா நிகழ்ச்சிக்கான உத்தியோகபூர்வ இணையத்தளமான dvlottery.state.gov மூலமாக பிரத்தியேக இலக்கத்தைப் பதிவு செய்து பார்த்துக் கொள்ளலாம்.” என குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages